Home
Mobile

அதகளம் பண்ணும் Nothing.. 50எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. AMOLED டிஸ்பிளே.. என்ன மாடல்? என்ன விலை?

நத்திங் நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் நத்திங் போன் 2ஏ மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது TDRA சான்றிதழ் தளத்தில் இந்த போன் காணப்பட்டுள்ளது. எனவே வரும் வாரங்களில் இந்த அசத்தலான நத்திங் போன் 2ஏ மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் நத்திங் CEO கார்ல் பை இந்த நத்திங் போன் 2ஏ வருவதைச் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த புதிய நத்திங் போன் 2ஏ மாடல் ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த நத்திங் போன் 2ஏ மாடலின் அம்சங்களைப் பார்ப்போம்.

அதகளம் பண்ணும் Nothing.. 256ஜிபி மெமரி.. AMOLED டிஸ்பிளே.. என்ன மாடல்?

நத்திங் போன் 2ஏ அம்சங்கள் (Nothing Phone 2a specifications): டூயல் ரியர் கேமரா, பஞ்ச்-ஹோல் நாட்ச் டிஸ்பிளே, கிளிஃப் லைட்டிங் லேஅவுட் (Glyph lighting layout) போன்ற பல சிறப்பு அம்சங்களுடன் இந்த நத்திங் போன் 2ஏ மாடல் அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது நத்திங் நிறுவனம்.

6.7-இன்ச் அமோலெட் டிஸ்பிளே ( AMOLED display) வசதியுடன் இந்த நத்திங் போன் 2ஏ மாடல் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் ( MediaTek Dimensity 7200 SoC) வசதியுடன் இந்த நத்திங் போன் 2ஏ மாடல் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும்.

ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும். குறிப்பாக 8ஜிபி ரேம் + 28ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த நத்திங் போன் 2ஏ மாடல் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு கொண்டுள்ளது இந்த நத்திங் ஸ்மார்ட்போன்.

50எம்பி Samsung ISOCELL S5KGN9 பிரைமரி கேமரா + 50எம்பி ISOCELL JN1 அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த நத்திங் போன் 2 மாடல் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

அதகளம் பண்ணும் Nothing.. 256ஜிபி மெமரி.. AMOLED டிஸ்பிளே.. என்ன மாடல்?

குறிப்பாக 4290எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த நத்திங் போன் 2ஏ மாடல் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் தான் நத்திங் போன் 2ஏ மாடல் வெளிவரும். இந்த புதிய நத்திங் போனில் டால்பி ஆடியோ வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவும் இதில் உள்ளது.

கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இந்த நத்திங் போன் 2ஏ மாடல் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி இந்த நத்திங் போன் 2ஏ ஆனது இந்தியாவில் ரூ.36,800 விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

photo courtesy: @Sunniton/Weibo, sportskeeda, notebookcheck

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 2a Spotted on TDRA Certification Site: May Launch in India Soon: check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X