அதிரும் மார்க்கெட்.. 6.7-இன்ச் டிஸ்பிளே.. டூயல் ரியர் கேமரா.. வருகிறது புதிய நத்திங் போன்.. எந்த மாடல்?
நத்திங் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் நத்திங் நிறுவனம் விரைவில் இந்தியாவில் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது நத்திங் போன் (2ஏ) (Nothing Phone (2a)) எனும் ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்ய உள்ளது இந்நிறுவனம்
அதாவது வரும் வாரங்களில் இந்த புதிய நத்திங் போன் 2ஏ மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த நத்திங் போன் 2ஏ மாடல் ஆனது BIS சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளது. குறிப்பாக நத்திங் போன் 2ஏ ஆனது A142 என்ற மாடல் நம்பரைக் கொண்டுள்ளது.

அதேபோல் நத்திங் போன் 2 போனை விட டூயல் ரியர் கேமரா மற்றும் பெரிய பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த நத்திங் போன் 2ஏ மாடல். இணையதளத்தில் வெளியான தகவலின்படி இந்த நத்திங் போன் 2ஏ ஆனது 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும்.
குறிப்பாக ஸ்னாப்டிராகன் அல்லது மீடியாடெக் டைமென்சிட்டி சிப்செட் உடன் நத்திங் போன் 2ஏ மாடல் வெளிவரும். பின்பு நத்திங் போன் 2 மாடலை விடச் சற்று உயர்வான விலையில் நத்திங் போன் 2ஏ மாடல் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்த நத்திங் போன் 2 போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
நத்திங் போன் 2 அம்சங்கள்: 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டு இந்த அசத்தலான நத்திங் போன் 2 வெளிவந்துள்ளது. 240Hz டச் சாம்பிளிங் ரேட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட், கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
நத்திங் போன் 2 குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 (Qualcomm Snapdragon 8+ Gen 1) சிப்செட் உடன் வெளிவந்துள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் நத்திங் ஒஎஸ் 2.0 (NothingOS 2.0) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி மெயின் கேமரா (Sony IMX890 Sensor)+ 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா (Samsung JN1 Sensor) என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த நத்திங் போன் 2. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த அசத்தலான நத்திங் போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனின் பேக் பேனலில் டிரான்ஸ்பரன்ட் டிசைன், எல்இடி லைட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன.
நத்திங் போன் 2 மாடலில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4,700mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் இருக்கிறது. IP54 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளிட்ட ஃபிளாக்ஷிப் அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நத்திங் போன் ஓயிட் (White), டார்க் கிரே (Dark Grey) ஆகிய 2 கலர்களில் கிடைக்கும். குறிப்பாக இந்த நத்திங் போன் 2 தற்போது ரூ.39,999-க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








