விட்றாதீங்கப்போ.. திடீரென விலை குறைந்த Nothing Phone 2a.. பட்ஜெட்ல வாங்க பெஸ்ட் Mobile.. மிஸ் பண்ணிடாதீங்க..
நத்திங் (Nothing) நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடலான நத்திங் போன் 2a (Nothing Phone 2a) மீது திடீரென விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வரை இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த விலையில் இருந்து, கூடுதல் சிறப்பு தள்ளுபடியை பெற்று, தற்போது நத்திங் போன் 2a மிகமிக குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. அதிக செலவின்றி மிகக்குறைந்த விலையில் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டவர்கள் இந்த சலுகையை மிஸ் செய்யவே கூடாது. சரி, திடீர் விலை குறைப்பிற்கு பிறகு Nothing Phone (2a) விலை என்பது இங்கே.
ஜனவரி 26, 2025 ஆம் தேதி கொண்டாடப்பட்ட குடியரசு தின கொண்டாட் விற்பனையை (Flipkart Republic Day Sale) தொடர்ந்து, பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் மாத இறுதி விற்பனை (Flipkart month-end sale) சலுகையின் ஒரு பகுதியாக Nothing Phone 2a மீது ஒரு அட்டகாசமான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மிட்-ரேஞ் (mid-range mobile) விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நத்திங் போன் 2a விலை சட்டென்று குறைந்துள்ளது.

விட்றாதீங்கப்போ.. திடீரென விலை குறைந்த Nothing Phone 2a:
பிளிப்கார்ட் தரும் சிறப்பு சலுகையுடன் (Flipkart special offer) கூடுதலாக பல வங்கிகள் வழங்கும் எக்ஸ்ட்ரா சலுகையும் இப்போது இந்த போனின் மீது கிடைப்பதனால், இதை விட குறைந்த விலையில் Nothing Phone (2a) போனை வாங்க வாய்ப்பில்லை என்று கூட நாம் கூறலாம். இந்த சலுகையில் 12GB ரேம் (RAM) + 256GB ஸ்டோரேஜ் (storage) மாடலே குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Nothing Phone (2a) இந்தியாவில் மூன்று ஸ்டோரேஜ் விருப்பங்களில் வாங்க கிடைக்கிறது. இதில் Nothing Phone (2a) சாதனம் 8GB RAM + 128GB, 8GB RAM + 256GB, மற்றும் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக வாங்க கிடைக்கின்றன. இதன் துவக்க விலை ரூ. 25,999 முதல் வாங்க கிடைக்கிறது. ஆனால், தற்போது விலை குறைந்து ரூ. 22,999 விலையில் வாங்க கிடைக்கிறது.
சிறப்பு சலுகை மேல் எக்ஸ்ட்ரா வங்கி சலுகையுமா? அடேங்கப்பா:
இதன் 256GB மாடல் மீது ரூ. 3000 வரை நேரடி தள்ளுபடி வழங்கப்பட்டு, இப்போது இந்த ஸ்டோரேஜ் விருப்பம் வெறும் ரூ. 24,999 என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இத்துடன் கூடுதலாக ரூ. 1500 வரை எக்ஸ்ட்ரா வங்கி சலுகையும் கிடைக்கிறது. இதன் மூலம் நத்திங் போன் 2a சாதனம் ரூ. 21,999 விலை முதல் வாங்க கிடைக்கிறது. இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.
நத்திங் போன் 2a சிறப்பம்சம் (Nothing Phone 2a Specifications):
- 6.7 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே (display)
- 120Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate)
- கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு (corning gorilla glass)
- மீடியாடெக் டைமென்சிட்டி 7200 ப்ரோ சிப்செட் (chipset)
- 8GB / 12GB ரேம் + 128GB / 256GB ஸ்டோரேஜ் (storage)
- ஆண்ட்ராய்டு 14 உடன் நத்திங் ஓஎஸ் (Android 14 Nothing OS)
- 50MP + 50MP கேமரா OIS (camera)
- 32MP செல்பி கேமரா (selfie camera)
- WiFi, 5G, 4G, LTE, Bluetooth, and NFC அம்சங்கள்
- 5000mAh பேட்டரி (battery)
- 45W பாஸ்ட் சார்ஜிங் (fast charging)


Click it and Unblock the Notifications








