மிரளுது டிஸ்கவுண்ட்.. பட்ஜெட்ல OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 256GB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
நத்திங் பிரியர்களுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது போல, அமோலெட் டிஸ்பிளே, சாம்சங் சென்சார் மெயின் கேமரா, பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மீடியாடெக் டைமன்சிட்டி 7350 சிப்செட், 50W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொடுக்கும் நத்திங் போன் 2ஏ பிளஸ் (Nothing Phone 2a Plus) போனுக்கு மிரட்டலான டிஸ்கவுண்ட் பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.
நத்திங் போன் 2ஏ பிளஸ் அம்சங்கள் (Nothing Phone 2a Plus Specifications): இந்த நத்திங் போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7350 எஸ்ஓசி (4nm Octa Core MediaTek Dimensity 7350 Pro SoC) சிப்செட் வருகிறது. மேலும், நத்திங் ஓஎஸ் 2.6 யுஐ பேக் செய்துள்ளது. பிரீமியம் டிஸ்பிளே பீச்சர்கள் கிடைக்கின்றன.

ஏனென்றால், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) கொண்ட அமோலெட் (AMOLED) பேனல் கிடைக்கிறது. 6.7 (2412 × 1084 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி இருக்கிறது.
இந்த நத்திங் போன் 2ஏ பிளஸ் போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் ஆர்டருக்கு கிடைக்கின்றன. டிஸ்பிளேவை போல கேமராவில் அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை பெற்று கொள்ளலாம். ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், சாம்சங் ஜேஎன்9 (Samsung GN9) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.
இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஆக்சன் மோட் (Action Mode) பீச்சர் கிடைக்கிறது. மெயின் கேமராவுடன் சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சாருடன் 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது. இதே சாம்சங் சென்சார் கொடுக்கும் 50 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த ஷூட்டரிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த நத்திங் போனில் 5000mAh பேட்டரி மற்றும் 50W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.55 எம்எம் தடிமன் மற்றும் 190 கிராம் எடை வருகிறது. IP54 டஸ்ட் / ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஆப்டிகல் அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Optical Under Display Fingerprint Sensor) வருகிறது.
மேலும், டைப்-சி ஆடியோ (Type-C Audio), 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி சப்போர்ட் கிடைக்கிறது. இந்த நத்திங் போன் 2ஏ பிளஸ் போனில் டிரான்ஸ்ப்ரன்ட் பாடியில் 2 கலர்கள் வருகின்றன. ஆகவே, கிரே (Grey) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்களில் எல்இடி ஸ்ட்ரிப் பேனலுடன் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
இந்த நத்திங் போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.27,999 ஆக இருந்தது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1000 விலை குறைவாக ரூ.26,000 பட்ஜெட்டில் வருகிறது. இந்த பட்ஜெட்டில் ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் பெற்று கொள்ள முடியும். எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு இந்த உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








