ஜஸ்ட் ரூ.1000 தான் அதிகம்.. Nothing Phone 2a Plus ஸ்மார்ட்போனை ஆளுக்கு 1 வாங்க போகும் இந்தியர்கள்!
2024 ஜூலை மாதத்தில் கடைசியாக அறிமுகமாகும் ஸ்மார்ட்போனாக.. மற்றும் நத்திங் நிறுவனத்தின் நான்காவது ஸ்மார்ட்போனாக நத்திங் போன் 2ஏ பிளஸ் (Nothing Phone 2a Plus) மாடல் ஆனது இன்று (ஜூலை 31) இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கான வெளியீட்டு நிகழ்வு (Launch Event) எப்போது நடக்கும்? அதை லைவ் ஸ்ட்ரீமிங் (Live Streaming) செய்வது எப்படி? என்னென்ன அம்சங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளது? இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இதோ விவரங்கள்:
நத்திங் போன் 2ஏ பிளஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வு மற்றும் நேரலை விவரங்கள்: நத்திங் நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போனிற்கான வெளியீட்டு நிகழ்வு இன்று மதியம் அதாவது ஜூலை 31 ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு தொடங்கும். இந்த நிகழ்வு நத்திங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் யூட்யூப் சேனல் வழியாக லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.

நத்திங் போன் 2ஏ பிளஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது? இந்த ஸ்மார்ட்போனின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது. அதன் வழியாக, நத்திங் போன் 2ஏ பிளஸ் ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் கிடைமட்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு ரியர் கேமராக்களை பார்க்க முடிகிறது. கூடவே வெள்ளி மற்றும் சாம்பல் நிற டூயல்-டோன் வடிவமைப்பையும் கொண்டுள்ளது.
அதாவது இது கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனை போலவே உள்ளது. மேலும் இந்த புதிய போன் எல்இடி லைட்ஸ் மற்றும் கடினமான அவுட்லைன் கொண்ட கிளிப் இன்டர்பேஸை தக்கவைத்துக்கொள்வதாக தோன்றுகிறது. நத்திங் போன் 2ஏ பிளஸ் மாடலில் மீடியாடெக் டைமன்சிட்டி 7350 ப்ரோ (MediaTek Dimensity 7350 Pro) சிப்செட் இடம்பெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் ரியர் கேமரா செட்டப்பில் இரண்டு 50 மெகாபிக்சல் கேமராக்கள் மற்றும் முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறும். இது 12 ஜிபி ரேம் உடன் வரும் மற்றும் ரேம் பூஸ்டர் தொழில்நுட்பத்துடன் இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து கிட்டத்தட்ட 20 ஜிபி வரை ரேம்-ஐ விரிவாக்க முடியும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, நத்திங் போன் 2ஏ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது பிளாக் மற்றும் க்ரே கலர்களில் அறிமுகம் செய்யப்படலாம். இது 6.7 இன்ச் 120 ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்பிளே, இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், 50W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி போன்ற அம்சங்களை பேக் செய்யலாம்.
நத்திங் போன் 2ஏ பிளஸ் ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வரும்? மேற்கண்ட அம்சங்களை வைத்து பார்க்கும் போது இந்தியாவில் நத்திங் போன் 2ஏ பிளஸ் ஸ்மார்ட்போனின் விலையானது நத்திங் போன் 2ஏ மாடலை விட ரூ.1,000 அல்லது ரூ.2,000 அதிகமாக இருக்கலாம். ஆக இது இந்துயா சந்தையில் ரூ.25,000 க்கு அருகில் என்கிற பட்ஜெட்டில் வெளியாகலாம். நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 2ஏ தற்போது ரூ.23,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நத்திங் போன் 2ஏ-வின் முக்கிய அம்சங்கள்: இது பேக் பேனலில் மூன்று கிளிஃப் எல்இடி ஸ்ட்ரிப்ஸ், ஐபி54 ரேட்டிங், 6.7-இன்ச் பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளே, டூயல் ரியர் கேமரா செட்டப்பில் OIS-க்கான ஆதரவுடன் 50எம்பி + 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா, 32எம்பி செல்பீ கேமரா, இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், மீடியாடெக் டைமன்சிட்டி7200 ப்ரோ சிப்செட், 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.
மேலும் நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 அவுட் ஆஃப் தி பாக்ஸ் அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.5 கொண்டு இயங்குகிறது. இதற்கு 3 வருட ஓஎஸ் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதே போன்ற ஓஎஸ் சப்போர்ட்-ஐ நத்திங் போன் 2ஏ பிளஸ் மாடலிலும் நாம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








