அதிருது இந்திய மார்க்கெட்.. 50எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Nothing போன்.. எந்த மாடல்?
நத்திங் நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் அடுத்து நத்திங் போன் 2ஏ பிளஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஜூலை 31-ம் தேதி நத்திங் போன் 2ஏ பிளஸ் (Nothing Phone 2a Plus) மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் முக்கிய அம்சங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
நத்திங் போன் 2ஏ பிளஸ் அம்சங்கள் (Nothing Phone 2a Plus Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) கொண்டுள்ளது இந்த நத்திங் போன் 2ஏ பிளஸ் மாடல். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

மீடியாடெக் டைமன்சிட்டி 7350 ப்ரோ சிப்செட் (Dimensity 7350 Pro SoC) வசதியைக் கொண்டுள்ளது நத்திங் போன் 2ஏ பிளஸ் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டு வெளிவரும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
50எம்பி பிரைமரி கேமரா + அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த நத்திங் போன் 2ஏ பிளஸ் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
குறிப்பாக இந்த போனின் கேமராக்கள் 4கே வீடியோ பதிவு செயயும். அதேபோல்மாலி - ஜி610 எம்சி4 ஜிபியு (Mali - G610 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த நத்திங் போன் 2ஏ பிளஸ் மாடல். எனவே கேமிங் பயனர்கள் இந்த புதிய ஸ்மார்போனை நம்பி வாங்கலாம்.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் நத்திங் போன் 2ஏ பிளஸ் விற்பனைக்கு வரும். மேலும் இந்த போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது நத்திங் நிறுவனம்.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் நத்திங் போன் 2ஏ பிளஸ் மாடல் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.20,000 பட்ஜெட்டில் நத்திங் போன் 2ஏ பிளஸ் மாடல் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய நத்திங் போன்.
photo courtesy: smartprix.com, gizmochina


Click it and Unblock the Notifications








