Home
Mobile

Amazon-ல் ஆர்டர் தெறிக்குது.. ரூ.5100 டிஸ்கவுண்ட்.. இந்த Nothing போனை வாங்க இதான் சரியான நேரம்!

நத்திங் (Nothing) நிறுவனம் அதன் 2 புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை.. அதாவது நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வேகத்தில், அதன் அடுத்த ஸ்மார்ட்போன் ஆன நத்திங் போன் 3 (Nothing Phone 3) அறிமுகம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

புதிய நத்திங் போன் 3ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஈர்க்கப்படாத வாடிக்கையாளர்களின் கண்கள் மற்றும் கவனத்தை அப்படியே திருப்பும்படி அமேசான் வலைத்தளம் ஒரு அட்டகாசமான ஆபரை அறிவித்துள்ளது. நத்திங் போன் 3ஏ ப்ரோ மாடலுக்கு முன்னர் வெளியான நத்திங் போன் 2ஏ பிளஸ் (Nothing Phone 2a Plus) மாடல் ஆனது தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

ரூ.5100 டிஸ்கவுண்ட்.. இந்த Nothing போனை வாங்க இதான் சரியான நேரம்!

தற்போது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் நத்திங் போன் 2ஏ பிளஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 17% நேரடி தள்ளுபடியை பெற்று, அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.29,999 க்கு பதிலாக ரூ.24,890 க்கு வாங்க கிடைக்கிறது.

நத்திங் போன் 2ஏ பிளஸ் ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? டூயல் சிம் நானோ ஆதரவுடன் (Dual SIM Nano Support) வரும் நத்திங் போன் 2ஏ பிளஸ் ஆனது ஆண்ட்ராய்டு 14 (Android 14) அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.6 (Nothing OS 2.6) மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று வருட ஆண்ட்ராய்டு அப்டேட்கள் (Android Updates) மற்றும் நான்கு வருட செக்யூரிட்டி அப்டேட்களை (Security Updates) பெறும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 1080 x 2412 பிக்சல்கள், 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெப்ரெஷ் ரேட், 394பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5ப்ரொடெக்ஷன் உடனான 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி (AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை, இது மாலி-ஜி610 எம்சி4 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட ஆக்டாகோர் 4 என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7350 ப்ரோ 5ஜி சிப்செட்டை பேக் செய்கிறது.

கேமராக்களை பொறுத்தவரை, இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual rear camera setup) கொண்டுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (சாம்சங் GN9 1/1.57-இன்ச் சென்சார் எப்/1.88 அபெர்க்ஷர், 10எக்ஸ் டிஜிட்டல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) + 50-மெகாபிக்சல் செகண்டரி கேமரா (சாம்சங் JN1 1/2.76-இன்ச் சென்சார், 114 டிகிரி பீல்ட் ஆப் வியூ) உள்ளது. முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் சாம்சங் JN1 செல்பீ ஷூட்டர் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, இது 50W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு (Fast Charging Support) மற்றும் 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவு (Reverse Wired Charging Support) உடனான 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 40.6 மணிநேரம் வரை ம்யூசிக் பிளேபேக் டைமை வழங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இதன் ஃ பாஸ்ட் சார்ஜிங் அம்சம் 56 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவீதம் வரை பேட்டரியை நிரப்பும் என்றும் கூறப்படுகிறது

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, 5ஜி, 4ஜி LTE, வைஃபை 6, வைஃபை 6 டைரக்ட், ப்ளூடூத் 5.3, இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், லீனியர் ஹாப்டிக் மோட்டார் (Linear haptic motor), எச்டி மைக்ரோஃபோன்கள் (High-definition microphones), டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual stereo speakers), ஐபி54 தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு கட்டமைப்பு (IP54 rating) போன்றவைகளை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 2a Plus Selling At Discounted Price in Amazon India Check Offer Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X