Home
Mobile

மறந்துடாதீங்க.. நாளை அறிமுகமாகும் புது Nothing Phone 2a Plus.. விலை கம்மியோ கம்மி ஆகலாம்? என்ன ஸ்பெஷல்?

நத்திங் (Nothing) நிறுவனம் நாளை அதன் மற்றொரு புதிய ஸ்மார்ட்போன் சாதனமான நத்திங் போன் 2a பிளஸ் - Nothing Phone (2a) Plus என்ற அட்டகாசமான சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய நத்திங் போன் 2a பிளஸ் (Nothing Phone 2a Plus) ஸ்மார்ட்போன் ஜூலை 31, 2024 ஆம் தேதி (நாளை), இந்திய நேரத்தின் படி, மதியம் சுமார் 2:30 மணி அளவில் அறிமுகம் செய்யப்படும் என்று நத்திங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அறிமுகத்திற்கு முன்பாக இந்த புதிய ஸ்மார்ட்போனில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்ற விபரம் இதோ.

நத்திங் நிறுவனம் அதன் வரிசையில் மொத்தம் இப்போது வரை வெறும் மூன்றே மூன்று மாடல்களை மட்டுமே அறிமுகம் செய்துள்ளது. இதில் நத்திங் போன் 1 (Nothing Phone 1), நத்திங் போன் 2 (Nothing Phone 2), மற்றும் நத்திங் போன் 2a (Nothing Phone 2a), ஆகிய மூன்று மாடல்களை நத்திங் நிறுவனம் அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறது.

மறந்துடாதீங்க.. நாளை அறிமுகமாகும் புது Nothing Phone 2a Plus..

நத்திங் போன் 2a பிளஸ் (Nothing Phone 2a Plus):

இந்த வரிசையில், நத்திங் நிறுவனம் நாளை புதிதாக நத்திங் போன் 2a பிளஸ் (Nothing Phone 2a Plus) என்ற போனை அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் வழக்கமான நத்திங் போன் போல இல்லாமல் மெட்டாலிக் பினிஷ் உடன் புதிய தோற்றத்தில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் கிலிஃப் லைட் வடிவமைப்பு அப்படியே Nothing Phone 2a போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

புதிதாக அறிமுகம் செய்யப்படும் நத்திங் போன் 2a போனில் 50MP + 50MP கொண்ட டூயல் கேமரா அமைப்பு இடம்பெறும் என்று லீக் தகவல்கள் மற்றும் நிறுவனத்தின் டீசர் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முன்பக்கத்தில் 32MP செல்பி கேமராவை கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 7350 ப்ரோ சிப்செட் உடன் எதிர்பார்க்கப்படுகிறது.

தெரியாதவர்களுக்கு, நத்திங் நிறுவனம் அதன் முந்தைய ஸ்மார்ட்போன் சாதனமான Nothing Phone 2a மாடலில் மீடியாடெக் டைமென்சிட்டி 7200 ப்ரோ சிப்செட்டை பயன்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய சாதனம் முந்தைய போனை விட 10% கூடுதல் வேகமானது என்று நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. அதேபோல், இது 30% GPU வேகத்தை கொண்டது என்பதும் கவனிக்கத்தக்கது.

நத்திங் போன் 2a பிளஸ் நாளை அறிமுகம்:

இது 4K வீடியோ ரெக்கார்டிங் அம்சத்தை ரியர் கேமரா மற்றும் முன்பக்க கேமரா என்று இரண்டு கேமராக்களிலும் வழங்குகிறது. இது HDR இமேஜ் மற்றும் HDR10+ பிளேபேக் உடன் வருகிறது. இது டூயல் 5ஜி, ப்ளூடூத் 5.3 மற்றும் வைஃபை 6 சப்போர்ட் போன்ற ஆதரவுகளையும் பெரும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 12GB ரேம் மற்றும் 8GB விர்ச்சுவல் ரேம் உடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போன் நாளை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, நத்திங் நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன் சாதனங்களின் விலைகள் குறைவு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், நாளை அறிமுக நிகழ்வை மிஸ் செய்யாமல், நத்திங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனல், மற்றும் X பக்கம் வழியாக நேரலை காணலாம். உங்களுடன் மற்ற தகவல்களை தெளிவாக பகிர்ந்துகொள்கிறோம். அதுவரை எங்களுடன் இணைந்திருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 2a Plus Pre Launch Details Launch Time Expecting Camera Chipset Where To Watch Live
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X