அடிச்சான் பாரு.. விலை இவ்ளோ தானா.. Nothing Phone 2a Plus இந்தியாவில் அறிமுகம்.. ஆக.7 முதல் விற்பனை!
நத்திங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனாக நத்திங் போன் 2ஏ பிளஸ் (Nothing Phone 2a Plus) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 7350 5ஜி சிப்செட், இரண்டு 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப், 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா, 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு உடனான அமோஎல்இடி டிஸ்பிளே, நத்திங்கின் மேம்படுத்தப்பட்ட கிளிஃப் இன்டர்பேஸ், 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஐபி54 ரேட்டிங் போன்ற முக்கிய அம்சங்களுடன் வருகிறது. என்ன விலை? வேறு என்னென்ன அம்சங்கள்? எப்போது முதல் விற்பனை? இதோ விவரங்கள்:
என்னென்ன அம்சங்கள்? டூயல் சிம் நானோ ஆதரவுடன் (Dual SIM Nano Support) வரும் நத்திங் போன் 2ஏ பிளஸ் ஆனது ஆண்ட்ராய்டு 14 (Android 14) அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.6 (Nothing OS 2.6) மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று வருட ஆண்ட்ராய்டு அப்டேட்கள் (Android Updates) மற்றும் நான்கு வருட செக்யூரிட்டி அப்டேட்களை (Security Updates) பெறும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 1080 x 2412 பிக்சல்கள், 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெப்ரெஷ் ரேட், 394பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5ப்ரொடெக்ஷன் உடனான 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி (AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை, இது மாலி-ஜி610 எம்சி4 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட ஆக்டாகோர் 4 என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7350 ப்ரோ 5ஜி சிப்செட்டை பேக் செய்கிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual rear camera setup) கொண்டுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (சாம்சங் GN9 1/1.57-இன்ச் சென்சார் எப்/1.88 அபெர்க்ஷர், 10எக்ஸ் டிஜிட்டல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) + 50-மெகாபிக்சல் செகண்டரி கேமரா (சாம்சங் JN1 1/2.76-இன்ச் சென்சார், 114 டிகிரி பீல்ட் ஆப் வியூ) உள்ளது. முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் சாம்சங் JN1 செல்பீ ஷூட்டர் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, இது 50W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு (Fast Charging Support) மற்றும் 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவு (Reverse Wired Charging Support) உடனான 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 40.6 மணிநேரம் வரை ம்யூசிக் பிளேபேக் டைமை வழங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இதன் ஃ பாஸ்ட் சார்ஜிங் அம்சம் 56 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவீதம் வரை பேட்டரியை நிரப்பும் என்றும் கூறப்படுகிறது
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, 5ஜி, 4ஜி LTE, வைஃபை 6, வைஃபை 6 டைரக்ட், ப்ளூடூத் 5.3, இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், லீனியர் ஹாப்டிக் மோட்டார் (Linear haptic motor), எச்டி மைக்ரோஃபோன்கள் (High-definition microphones), டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual stereo speakers), ஐபி54 தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு கட்டமைப்பு (IP54 rating) போன்றவைகளை கொண்டுள்ளது.
என்ன விலை? நத்திங் போன் 2ஏ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது பேஸிக் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன் மற்றும் 12ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் டாப்-எண்ட் வேரியண்ட்டிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விற்பனையின் முதல் நாளில் 8 ஜிபி ரேம் ரூ.24,999 க்கும், அதன் பிறகு ரூ.27,999 க்கும் வாங்க கிடைக்கும். இதேபோல 12 ஜிபி மாடல் முதல் நாவிற்பனையில் ரூ.26,999 க்கும் பின்னர் ரூ.29,999 க்கும் வாங்க கிடைக்கும் இது பிளாக் மற்றும் க்ரே கலர் ஆப்ஷன்களில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








