Home
Mobile

பக்காவான Price-ல் புதிய Plus மாடல்.. Nothing-ன் 4வது ஸ்மார்ட்போன்.. ஜூலை 31-ல் அறிமுகம்!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமான நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) ஸ்மார்ட்போனின் மீதான டிமாண்ட் இன்னும் குறைந்த பாடில்லை. இன்னும் சொல்லப்போனால் இதுவரை நத்திங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 3 ஸ்மார்ட்போன்களில்.. கடைசியாக அறிமுகமான நத்திங் போன் 2ஏ மாடல் தான் - வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து, மாபெரும் வெற்றி அடைந்த ஒரே மாடல் ஆகும். நத்திங் நிறுவனத்தின் முதல் 2 ஸ்மார்ட்போன்கள் (நத்திங் போன் 1 மற்றும் நத்திங் போன் 2) ஆனது சொல்லிக்கொள்ளும்படி இல்லை (கிளிஃப் எல்இடி ஸ்ட்ரிப்ஸ்களை தவிர்த்து)!

இதற்கிடையில் நத்திங் நிறுவனம் தனது நான்காவது ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை உறுதிப்படுத்தியுள்ளது. உடனே உங்களில் சிலர் அது நத்திங் போன் 3 (Nothing Phone 3) மாடலாக இருக்கும் என்று நினைக்கலாம். அதுதான் இல்லை - நத்திங் நிறுவனம் தனது போன் 2ஏ மாடலுக்கு கிடைத்த வெற்றியை "இன்னும் சில காலங்களுக்கு" தக்கவைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது.

பக்காவான Price-ல் புதிய Plus மாடல்.. Nothing-ன் 4வது ஸ்மார்ட்போன்!

என்ன மாடல்? அதாவது நத்திங் போன் 3 மாடலுக்கு முன்பாக நத்திங் போன் 2ஏ பிளஸ் (Nothing Phone 2a Plus) என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இது வருகிற ஜூலை 31 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. நத்திங் போன் 2ஏ மாடலின் பீஃப்டு-அப் வெர்ஷன் ஆக இருக்கும். அதாவது போன் 2ஏ மாடலை விட மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் போன் 2ஏ பிளஸ் மாடல் அறிமுகமாகும்.

என்னென்ன அம்சங்கள்? நத்திங் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆன அகிஸ் எவாஞ்சலிடிஸின் கூற்றுப்படி, நத்திங் போன் 2ஏ பிளஸ் ஆனது "அதிக செயலாக்க சக்தி" மற்றும் "ஹார்ட்வேர் டிசைன் மாற்றங்கள் தேவையில்லாத வேறு சில மேம்பாடுகளுடன்" வரும். அதாவது நத்திங் போன் 2ஏ-வில் உள்ள (மீடியாடெக் டைமன்சிட்டி 7200 ப்ரோ) சிப்செட்டை விட மிகவும் சக்திவாய்ந்த சிப்செட் பிளஸ் மாடலில் பேக் செய்யப்படலாம்.

மேலும் வடிவமைப்பில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது. டீஸர் புகைப்படத்தின் வழியாக, நத்திங் போன் 2ஏ பிளஸ் ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் கிடைமட்டமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள 2 கேமராக்களை காண முடிகிறது. இந்த கேமராக்கள் ஒரு சர்குலர் ஐலேண்டில் உட்பொதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் மூன்று கிளிஃப் எல்இடி ஸ்ட்ரிப்ஸ்களையும் (Glyph LED strips) காண முடிகிறது.

என்ன விலை? எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை, நத்திங் போன் 2ஏ பிளஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.29,999 க்கு தொடங்கலாம். நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் தற்போது பிளிப்கார்ட் வழியாக ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஆக இதைவிட அதிக விலைக்கே பிளஸ் மாடல் அறிமுகமாகும்.

நத்திங் போன் 2ஏ-வின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? டிஸ்பிளேவை பொறுத்தவரை இது ஃபுல் எச்டி பிளஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர் 10 ஆதரவு உடனான 6.7-இன்ச் பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது

ப்ராசஸரை பொறுத்தவரை, இது மீடியாடெக் டைமன்சிட்டி7200 ப்ரோ சிப்செட் மூலம் இயங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை இது 50 எம்பி மெயின் கேமரா சென்சார் + 50 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி மற்றும் கடைசியாக தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு திறனுக்கான ஐபி54 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 2a Plus Launch Date July 31 Expected Price in India and Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X