Home
Mobile

2 புது மாடல் வருதுனு 2 பழைய Nothing போன்கள் மீது டிஸ்கவுண்ட்.. ஒன்னு ரூ.4500.. இன்னொன்னு ரூ.4000 குறைப்பு!

நத்திங் நிறுவனமானது வருகிற மார்ச் 4 ஆம் தேதியன்று, 2025 ஆம் ஆண்டின் தனது முதல் வெளியீட்டு நிகழ்வை நடத்த உள்ளது. முன்னதாக இந்நிகழ்வில் நத்திங் போன் 3 அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது; பின்னர் மார்ச் 4 ஆம் தேதியன்று நத்திங் போன் 3ஏ சீரீஸ் அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டது.

நத்திங் போன் 3ஏ சீரிஸின் கீழ் நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) என 2 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடல்களின் அறிமுகம் உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது பிளிப்கார்ட் வளைத்தளம் ஆனது நத்திங் போன் 2ஏ சீரீஸின் கீழ் உள்ள 2 மாடல்களின் மீது திடீர் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

2 புது மாடல் வருதுனு 2 பழைய Nothing போன்கள் மீது டிஸ்கவுண்ட்!

தள்ளுபடியை பெற்றுள்ள மாடல்கள் - நத்திங் போன் 2ஏ பிளஸ் மற்றும் நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன்கள் ஆகும். பிளிப்கார்ட்டில் தற்போது நத்திங் போன் 2ஏ பிளஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், அதன் அசல் விளையான ரூ.29,999 க்கு பதிலாக 15% தள்ளுபடியை பெற்று ரூ.25,499 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.4500 தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், அதன் அசல் விளையான ரூ.25,999 க்கு பதிலாக 15% தள்ளுபடியை பெற்று ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.4000 தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆபர் விலை, பிளிப்கார்ட் வலைதளத்தில் நடக்கும் காதலர் தின சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாகும் என்பதும், இந்த விற்பனை பிப்.14 உடன் முடிவடைகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பிளிப்கார்ட் வேலடைன்ஸ்டே சேல் 2025-ன் கீழ் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது என்கிற விவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

https://tamil.gizbot.com/mobile/flipkart-valentines-day-sale-2025-best-deals-on-4g-and-5g-mobile-phones-054155.html

நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளே பொறுத்தவரை, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை, நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி7200 ப்ரோ சிப்செட் உடன் வருகிறது. இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கிறது.

கேமராக்களை பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா செட்டப்பில் ஓஐஎஸ்-க்கான ஆதரவுடன் 50எம்பி மெயின் கேமரா சென்சார் + 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

நத்திங் போன் 2ஏ பிளஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 1080 x 2412 பிக்சல்கள், 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெப்ரெஷ் ரேட், 394பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5ப்ரொடெக்ஷன் உடனான 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி (AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ப்ராசஸரை பொறுத்தவரை, இது மாலி-ஜி610 எம்சி4 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட ஆக்டாகோர் 4 என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7350 ப்ரோ 5ஜி சிப்செட்டை பேக் செய்கிறது. கேமராக்களை பொறுத்தவரை, இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual rear camera setup) கொண்டுள்ளது.

அதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (சாம்சங் GN9 1/1.57-இன்ச் சென்சார் எப்/1.88 அபெர்க்ஷர், 10எக்ஸ் டிஜிட்டல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) + 50-மெகாபிக்சல் செகண்டரி கேமரா (சாம்சங் JN1 1/2.76-இன்ச் சென்சார், 114 டிகிரி பீல்ட் ஆப் வியூ) உள்ளது. முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் சாம்சங் JN1 செல்பீ ஷூட்டர் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, இது 50W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு (Fast Charging Support) மற்றும் 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவு (Reverse Wired Charging Support) உடனான 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 40.6 மணிநேரம் வரை ம்யூசிக் பிளேபேக் டைமை வழங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இதன் ஃ பாஸ்ட் சார்ஜிங் அம்சம் 56 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவீதம் வரை பேட்டரியை நிரப்பும் என்றும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nothing Phone 2a Plus Gets Discount Ahead Nothing Phone 3a Series Launch on March 4
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X