Home
Mobile

மின்மினி பூச்சி பேனல், 12GB ரேம், 50MP கேமரா, 5000mAh பேட்டரி.. சைலன்ட்-ஆ அறிமுகமான புது Nothing போன்!

நத்திங் நிறுவனமானது - சத்தம் போடாமல் - ஒரு புதிய ஸ்மார்ட்போனை இந்தியா மற்றும் உலகலாவிய சந்தைகளில் அறிமுகம் செய்துள்ளது. அது நத்திங் போன் 2ஏ பிளஸ் கம்யூனிட்டி எடிஷன் (Nothing Phone 2a Plus Community Edition) ஆகும். பெயர் குறிப்பிடுவது போலவே இது நத்திங் போன் 2ஏ பிளஸின் ஸ்பெஷல் எடிஷன் (Special Edition) ஆகும்!

அப்படி என்ன ஸ்பெஷல்? இது வன்பொருள் வடிவமைப்பு (Hardware design), வால்பேப்பர் வடிவமைப்பு (Wallpaper design), பேக்கேஜிங் வடிவமைப்பு (Packaging design) மற்றும் சந்தைப்படுத்தல் பிரச்சாரம் (Marketing campaign) உட்பட நத்திங் கம்யூனிட்டியிடம் இருந்து யோசனைகள் மற்றும் உதவிகளை பெற்று உருவாக்கப்பட்டுள்து. இந்த ஸ்மார்ட்போனை கஸ்டமைஸ் செய்ய 47 நாடுகளில் இருந்து 900 ரசிகர்களின் உள்ளீடுகளை பெற்றதாக நத்திங் நிறுவனம் கூறுகிறது.

மின்மினி பூச்சி பேனல்.. சைலன்ட்-ஆ அறிமுகமான புது Nothing போன்!

ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் உண்மையான ஹைலைட் - க்ளோ இன் தி டார்க் ரியர் பேனல் (Glow-in-the-Dark Rear Panel) தான். நத்திங் போன் 2ஏ பிளஸ் கம்யூனிட்டி எடிஷன் ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் பச்சை நிற பாஸ்போரெசென்ட் மெட்டீரியல் பூச்சு (Green phosphorescent material coating) உள்ளது. இது இருட்டில் பச்சை நிறத்தில் ஒளிருக்கிறது.

இருட்டான இடங்களில் அல்லது இரவு நேரங்களில் இது ஒளிரும் போது ஸ்மார்ட்போனின் ரியர் கேமராக்களை சுற்றி ஒளி கீற்றுகள் மின்னுவது போல (அதாவது மின்மினி பூச்சிகளை) போல் தெரிகிறது. மேலும் இந்த ஸ்பெஷல் எடிஷனில் புதிய வால்பேப்பர்கள் (New wallpapers) மற்றும் மினுமினுக்கும் டிசைனை வெளிப்படுத்தும் புதுப்பிக்கப்பட்ட பேக்கேஜிங்கும் (Revamped packaging) உள்ளது.

நத்திங் போன் 2ஏ பிளஸ் கம்யூனிட்டி எடிஷனின் முக்கிய அம்சங்கள்: நத்திங் போன் 2ஏ பிளஸ் கம்யூனிட்டி எடிஷனின் அம்சங்கள் ஆனது அப்படியே ஸ்டாண்டர்ட் எடிஷனை போலவே உள்ளது. அதாவது ஸ்பெஷல் எடிஷனின் பின்புறத்தில் சேர்க்கப்பட்டுள்ள க்ளோ இன் தி டார்க் ரியர் பேனல் (சிறிய வடிவமைப்பு மாற்றம்) தவிர்த்து, பழைய மாடலுக்கும், இந்த புதிய மாடலுக்கும் அம்சங்கள் அடிப்படையில் எந்த வேறுபாடுகளும் இல்லை!

ஆகவும் இதுவும் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.6 உடன் வரும் மற்றும் மூன்று வருட ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் நான்கு வருட செக்யூரிட்டி அப்டேட்களை பெறும். டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 1080 x 2412 பிக்சல்கள், 120ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், 394பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷன் உடனான 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ப்ராசஸரை பொறுத்தவரை, இது மாலி-ஜி610 எம்சி4 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட ஆக்டாகோர் 4 என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7350 ப்ரோ 5ஜி சிப்செட்டை (MediaTek Dimensity 7350 Pro 5G SoC) பேக் செய்கிறது. கேமராக்களை பொறுத்தவரை, இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual rear camera setup) கொண்டுள்ளது.

அதிக 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (சாம்சங் GN9 1/1.57-இன்ச் சென்சார் எப்/1.88 அபெர்க்ஷர், 10எக்ஸ் டிஜிட்டல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) + 50-மெகாபிக்சல் செகண்டரி கேமரா (சாம்சங் JN1 1/2.76-இன்ச் சென்சார், 114 டிகிரி பீல்ட் ஆப் வியூ) உள்ளது. முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் சாம்சங் JN1 செல்பீ ஷூட்டர் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, இது 50W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவு உடனான 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் இது 5ஜி, 4ஜி LTE, வைஃபை 6, வைஃபை 6 டைரக்ட், ப்ளூடூத் 5.3, இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஐபி54 ரேட்டிங் ஆகியவைகளையும் கொண்டுள்ளது.

நத்திங் போன் 2ஏ பிளஸ் கம்யூனிட்டி எடிஷனின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் சிங்கிள் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.29,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதுவொரு ஸ்பெஷல் எடிஷன் என்பதால் வெறும் 1,000 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nothing Phone 2a Plus Community Edition with Phosphorescent Back Panel Launched India Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X