Home
Mobile

ஜூலை 31 உறுதி.. 12ஜிபி ரேம்.. தரமான சிப்செட்.. இந்தியாவுக்கு வருகிறது புது Nothing போன்.. எந்த மாடல்?

நத்திங் நிறுவனம் வரும் ஜூலை 31-ம் தேதி நத்திங் போன் 2ஏ பிளஸ் (Nothing Phone 2a Plus) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் இந்த போனின் முக்கிய அம்சங்கள் கசிந்துள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

நத்திங் போன் 2ஏ பிளஸ் அம்சங்கள் (Nothing Phone 2a Plus Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7350 ப்ரோ சிப்செட் (Dimensity 7350 Pro SoC) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டு வெளிவரும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஜூலை 31 உறுதி.. 12ஜிபி ரேம்.. வருகிறது புது Nothing போன்.. எந்த மாடல்?

மாலி - ஜி610 எம்சி4 ஜிபியு (Mali - G610 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த நத்திங் போன் 2ஏ பிளஸ் மாடல். மேலும் 12ஜிபி ரேம் (8ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் செல்பி கேமரா மற்றும் ரியர் கேமராக்கள் 4கே வீடியோ பதிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் எச்டிஆர் இமேஜ், எச்டிஆர் 10 பிளஸ் பிளே பேக், டூயல் 5ஜி, புளூடூத் 5.3, வைஃபை 6 உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான நத்திங் போன் 2ஏ பிளஸ் மாடல். குறிப்பாக இந்த போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் நத்திங் நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன சிஎம்எப் (CMF) நிறுவனம் சமீபத்தில் சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

சிஎம்எப் போன் 1 அம்சங்கள் (CMF Phone 1 Specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் பிளஸ் (Super AMOLED Plus) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400 ×1080 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), 960Hz பிடபுள்யூஎம் டிம்மிங் (960Hz PWM dimming) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சிஎம்எப் போன். 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சிஎம்எப் போன் 1 வெளிவந்துள்ளது.

50எம்பி மெயின் கேமரா சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் (Sony IMX882 sensor) + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் என்கறி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. Nothing OS 2.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த சிஎம்எப் போன் 1 வெளிவந்துள்ளது.

ஜூலை 31 உறுதி.. 12ஜிபி ரேம்.. வருகிறது புது Nothing போன்.. எந்த மாடல்?

5000எம்ஏச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது இந்த போன். 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11ax), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி(USB Type-C) உள்ளிட்ட கனெக்ட்டிவிட்டி உள்ளன.

IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொண்டுள்ளது சிஎம்எப் போன் 1. குறிப்பாக இந்த போன் ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 2a Plus chipset and RAM details revealed:check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X