இந்த வித்தியாசம் தெரியலையா? புது Nothing Phone 2a Plus வாங்கவே கூடாது? என்ன தெரிஞ்சு வாங்கணும்?
நத்திங் (Nothing) நிறுவனம் இன்று அதன் புதிய ஸ்மார்ட்போன் சாதனமான நத்திங் போன் 2a பிளஸ் (Nothing Phone 2a Plus) மாடலை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம், கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் போன் 2a (Nothing Phone 2a) மாடலின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் நத்திங் நிறுவனம் என்னென்ன மேம்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது என்பதையும், நத்திங் போன் 2a பிளஸ் மற்றும் நத்திங் போன் 2a இடையிலான வேறுபாடுகள் என்ன என்பதையும் இப்போது தெரிந்துகொள்ளலாம்.
நத்திங் போன் 2a (Nothing Phone 2a) ஸ்மார்ட்போன் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டு ஏறக்குறைய 3 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளது. பிளஸ் என்ற அடையாளக்குறியுடன் நத்திங் நிறுவனம் இன்று புதிய நத்திங் போன் 2a பிளஸ் (Nothing Phone 2a Plus) என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனை வரும் ஆகஸ்ட் 7, 2024 ஆம் தேதி முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நத்திங் போன் 2a பிளஸ் அறிமுகம் (Nothing Phone 2a Plus Launch):
இதன் முன்பதிவு இன்று முதல் அமெரிக்காவில் துவங்குகிறது. இந்தியாவை பொறுத்த வரை, நத்திங் ரசிகர்கள் ஆகஸ்ட் 7, 2024 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் (Flipkart) தளம் வழியாக வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை பற்றி பேசுகையில், புதிய நத்திங் போன் 2a பிளஸ் போனின் 8GB ரேம் + 256GB வேரியண்ட் மாடல் இந்திய மதிப்பில் ரூ. 27,999 என்று விலை முதல் துவங்குகிறது.
நத்திங் போன் 2a பிளஸ் ஸ்மார்ட்போனின் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 29,999 என்ற விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை அப்படியே நத்திங் போன் 2a ஸ்மார்ட்போனின் விலையை நேர்கோட்டில் சந்தித்துள்ளது. அப்படியானால், இரண்டு போன்களுக்கும் ஒரே விலையா? என்று நீங்கள் கேள்வி கேட்கலாம்.
ஏறக்குறைய ஒரே விலையை தான் இந்த இரண்டு போன்களும் பெறுகின்றன. ஆனால், நத்திங் போன் 2a சாதனம் ரூ. 23,999 என்ற விலையில் இருந்து துவங்குகிறது. இந்த விலை 8GB ரேம் + 128GB மாடலுக்கானது. மிக நெருக்கமான விலையில் இரண்டு போன்களும் வருகிறதென்றால், இரண்டிற்கும் இடையில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று கண்டிப்பாக நமக்கு தெரிய வேண்டும் தானே. வாருங்கள் பார்க்கலாம்.
நத்திங் போன் 2a பிளஸ் (Nothing Phone 2a Plus):
- 6.7' இன்ச் அளவுடன் FHD+ AMOLED டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரஷ் ரேட்
- மீடியாடெக் டைமென்சிட்டி 7350 ப்ரோ சிப்செட்
- 12GB ரேம் + 8GB ரேம் பூஸ்ட்
- மொத்தமாக 20GB ரேம்
- 256GB UFS 2.2 ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 14
- நத்திங் OS 2.6
- டூயல் 50MP ரியர் கேமரா
- 50MP செல்பி கேமரா
- 5000mAh பேட்டரி
- 50W சார்ஜிங்
நத்திங் போன் 2a (Nothing Phone 2a):
- 6.7' இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரஷ் ரேட்
- மீடியாடெக் டைமென்சிட்டி 7200 ப்ரோ சிப்செட்
- 12GB ரேம் + 8GB ரேம் பூஸ்ட்
- மொத்தமாக 20GB ரேம்
- 256GB UFS 2.2 ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 14
- நத்திங் OS 2.5
- டூயல் 50MP ரியர் கேமரா
- 32MP செல்பி கேமரா
- 5000mAh பேட்டரி
- 45W சார்ஜிங்
இந்த இரண்டு போனிற்கும் இடையில் சிறிய வேறுபாடுகள் மட்டுமே உள்ளது. எந்த அம்சங்கள் உங்களுக்கு ஏற்றது என்பதை பார்த்து, அறிந்துகொண்ட பிறகு, உங்களுக்கான சரியான மாடலை தெரிந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








