புதுசு வந்ததும் பழசு மீது ரூ.7001 விலை குறைப்பு.. இந்த Nothing Phone-ஐ வாங்க இதான் சரியான நேரம்!
நத்திங் நிறுவனம் அதன் நத்திங் போன் 3ஏ சீரிஸின் கீழ் 2 புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் கீழ் நத்திங் போன் 3ஏ மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ ஆகிய 2 மாடல்கள் வெளியாகின. அதாவது நத்திங் போன் 2ஏ பிளஸ் மாடலின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக நத்திங் போன் 3ஏ பிளஸ் என்கிற மாடல் அறிமுகம் செய்யப்படவில்லை.
மாறாக நத்திங் போன் 3ஏ ப்ரோ என்கிற மாடல் அறிமுகமானது. புதிய மாடல் அறிமுகமாதும் பழைய மாடல் தற்போது ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. க்ரோமா வலைத்தளத்தில் (Croma Website) தற்போது நத்திங் போன் 2ஏ பிளஸ் 5ஜி (Nothing Phone 2a Plus 5G) ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் +256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன், அதன் அசல் அறிமுக விலையான ரூ.27,999 க்கு பதிலாக ரூ.20,990 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.

அதாவது நத்திங் போன் 2ஏ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மீது ரூ.7009 நேரடி தள்ளுபடி கிடைக்கிறது. சுவாரசியமாக இந்த தள்ளுபடி , இந்த ஸ்மார்ட்போனின் 2 கலர் ஆப்ஷன்கள் மீதும் (க்ரே மற்றும் பிளாக்) கிடைக்கிறது.
நத்திங் போன் 2ஏ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் நானோ ஆதரவுடன் (Dual SIM Nano Support) வரும் நத்திங் போன் 2ஏ பிளஸ் ஸ்மார்ட்போனிற்கு 3 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்கள் (Android Updates) மற்றும் நான்கு வருட செக்யூரிட்டி அப்டேட்களை (Security Updates) பெறும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 1080 x 2412 பிக்சல்கள், 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெப்ரெஷ் ரேட், 394பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5ப்ரொடெக்ஷன் உடனான 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி (AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை, இது மாலி-ஜி610 எம்சி4 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட ஆக்டாகோர் 4 என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7350 ப்ரோ 5ஜி சிப்செட்டை பேக் செய்கிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual rear camera setup) கொண்டுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (சாம்சங் GN9 1/1.57-இன்ச் சென்சார் எப்/1.88 அபெர்க்ஷர், 10எக்ஸ் டிஜிட்டல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) + 50-மெகாபிக்சல் செகண்டரி கேமரா (சாம்சங் JN1 1/2.76-இன்ச் சென்சார், 114 டிகிரி பீல்ட் ஆப் வியூ) உள்ளது. முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் சாம்சங் JN1 செல்பீ ஷூட்டர் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, இது 50W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு (Fast Charging Support) மற்றும் 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவு (Reverse Wired Charging Support) உடனான 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 40.6 மணிநேரம் வரை ம்யூசிக் பிளேபேக் டைமை வழங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இதன் ஃ பாஸ்ட் சார்ஜிங் அம்சம் 56 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவீதம் வரை பேட்டரியை நிரப்பும் என்றும் கூறப்படுகிறது
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, 5ஜி, 4ஜி LTE, வைஃபை 6, வைஃபை 6 டைரக்ட், ப்ளூடூத் 5.3, இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், லீனியர் ஹாப்டிக் மோட்டார் (Linear haptic motor), எச்டி மைக்ரோஃபோன்கள் (High-definition microphones), டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual stereo speakers), ஐபி54 தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு கட்டமைப்பு (IP54 rating) போன்றவைகளை கொண்டுள்ளது.
அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!


Click it and Unblock the Notifications








