Home
Mobile

சொன்னதோ ரூ.40000.. ஆனா வந்ததோ ரூ.20000.. மார்ச் 12 முதல் Nothing Phone 2a ஆர்டர் அள்ளப்போகுது!

பட்ஜெட் விலையில் பிரீமியம் அம்சங்களை பேக் செய்வதாக உறுதியளிக்கப்பட்ட.. நத்திங் (Nothing) நிறுவனத்தின் மூன்றாவது ஸ்மார்ட்போனான நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) மாடலானது.. சொன்னதை விட ரூ.16,000 மலிவான விலைக்கு அறிமுகமாகி ஒட்டுமொத்த இந்தியர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

நத்திங் போன் 2ஏ-வின் டிசைன் மற்றும் முக்கிய அம்சங்கள்: வடிவமைப்பை பொறுத்தவரை, பேக் பேனலில் கிடைமட்டமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள 2 கேமராக்களை கொண்டுள்ளது; இந்த கேமராக்கள் ஒரு சர்குலர் ஐலேண்டில் உட்பொதிக்கப்பட்டுள்ளன. மேலும் பேக் பேனலில் மூன்று கிளிஃப் எல்இடி ஸ்ட்ரிப்ஸ்களை (Glyph LED strips) கொண்டுள்ளது.

மார்ச் 12 முதல் Nothing Phone 2a ஆர்டர் அள்ளப்போகுது!

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் ஆனது தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு திறனுக்கான ஐபி54 ரேட்டிங் உடன் வருகிறது. டிஸ்பிளே பொறுத்தவரை, இது FHD+ ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் HDR10 ஆதரவு உடனான 6.7-இன்ச் பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது

ஸ்லிம் பெசல்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது டிஸ்பிளேவில் உள்ள பஞ்ச்-ஹோல் கட்அவுட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃ பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் உள்ளது. இதன் டூயல் ரியர் கேமரா செட்டப்பில் OIS-க்கான ஆதரவுடன் 50எம்பி மெயின் கேமரா சென்சார் + 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா உள்ளது.

மார்ச் 12 முதல் Nothing Phone 2a ஆர்டர் அள்ளப்போகுது!

ப்ராசஸரை பொறுத்தவரை, நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி7200 ப்ரோ சிப்செட் உடன் வருகிறது. இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கிறது. மேலும் இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

கடைசியாக நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 அவுட் ஆஃப் தி பாக்ஸ் அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.5 கொண்டு இயங்குகிறது. இதற்கு 3 வருட ஓஎஸ் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மார்ச் 12 முதல் Nothing Phone 2a ஆர்டர் அள்ளப்போகுது!

நத்திங் போன் 2ஏ விலை மற்றும் விற்பனை: நத்திங் நிறுவனத்தின் முதல் 2 ஸ்மார்ட்போன்களை போலவே நத்திங் போன் 2 ஏ மாடலும் கூட ஒயிட் மற்றும் பிளாக் கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.23,999 க்கு அறிமுகமாகி உள்ளது.

அதாவது எதிர்பார்க்கப்பட்ட விலையான ரூ.40,000-க்கு பதிலாக ரூ16,000 மலிவான விலைக்கு அறிமுகமாகியுள்ளது. கூடுதலாக எச்டிஎப்சி பேங்க் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.2,000 உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். இப்படியாக நத்திங் போன் 2 ஏ ஸ்மார்ட்போனின் இறுதி விலையை ரூ.20,000 பட்ஜெட்டிற்கு கொண்டுவர முடியும்.

நத்திங் போன் 2 ஏ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,999 க்கும், ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.27,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே, பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் வழியாக மார்ச் 12 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 2a Launched in India Price Specifications Flipkart Sale Start From March 12
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X