Home
Mobile

இந்த விலைக்கு.. Nothing கிட்ட இருந்து இப்படி ஒரு Phone-ஆ.. 12GB ரேம், 32MP செல்பீ, 120Hz டிஸ்பிளேனு அசத்துது!

நத்திங் (Nothing) நிறுவனத்தின் இரண்டாவது ஸ்மார்ட்போனான நத்திங் போன் 2 (Nothing Phone 2) எதிர்பார்த்த அளவிலான வெற்றியை, வரவேற்பை பெறவில்லை. அதற்கு சாட்சி 2023 டிசம்பர் மாத தொடக்கத்தில் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் மீது அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய விலைக்குறைப்பு!

2023 ஜூலை மாதத்தில் இந்தியாவில் அறிமுகமான போது நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.44,999 ஆக இருந்தது. பின்னர் டிசம்பர் மாத வாக்கில் ரூ.5000 விலைக்குறைப்பை பெற்று ரூ.39,999 ஆக குறைந்தது.

இந்த விலைக்கு.. Nothing கிட்ட இருந்து இப்படி ஒரு Phone-ஆ!

இதேபோல ரூ.49,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டரோஜ் ஆப்ஷன் ரூ.44,999 ஆக விலை குறைக்கப்பட்டது. நத்திங் போன் 2-வின் ஹை-எண்ட் ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆன 12ஜி ரேம் மற்றும் 512ஜிபி ஆப்ஷன் ரூ.54,999 இல் இருந்து ரூ.49,999 ஆக குறைக்கப்பட்டது.

இந்த விலைக்குறைப்பு, மிகவும் தெளிவாக நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் தோல்வியை பிரதிபலிக்கிறது. இதற்கிடையில் தான் நத்திங் ஸ்மார்ட்போன் மிகவும் புத்திசாலித்தனமான ஒரு வேலையை பார்த்துள்ளது. தனது மூன்றாவது ஸ்மார்ட்போனாக நத்திங் போன் 3 (Nothing Phone 3) மாடலை அறிமுகம் செய்வதற்கு முன்னர், மலிவான விலைக்கு புதிய மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த விலைக்கு.. Nothing கிட்ட இருந்து இப்படி ஒரு Phone-ஆ!

அது நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) மாடலாகும். இது மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2024 (Mobile World Congress 2024) நிகழ்வில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2024 நிகழ்வு எப்போது நடக்கும்? நத்திங் போன் 2ஏ என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? டிப்ஸ்டர் ரோலண்ட் குவாண்ட், எக்ஸ் தளம் வழியாக பகிர்ந்த தகவல்களின்படி நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனானது (வழக்கம் போல) பிளாக் மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் வெளியாகும். இது 8ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி என மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும்.

இந்த விலைக்கு.. Nothing கிட்ட இருந்து இப்படி ஒரு Phone-ஆ!

நத்திங் போன் 2ஏ மாடலில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கிளிஃப் இன்டர்ஃபேஸை நாம் எதிர்பார்க்கலாம். இதன் பேக் பேனலில் டூயல் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். அதில் 1/1.5-இன்ச் 50 மெகாபிக்சல் சாம்சங் S5KNG9 மெயின் சென்சார் மற்றும் 1/2.76-இன்ச் 50 மெகாபிக்சல் சாம்சங் S5KJN1 சென்சார் பேக் செய்யப்படலாம். இதன் கேமரா செட்டப்பில் அல்ட்ராவைட் லென்ஸ் சேர்க்கப்படலாம். முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் சோனி IMX615 செல்பீ கேமரா இருக்கலாம்.

நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் (MediaTek Dimenisty 7200 SoC) மூலம் இயக்கப்படலாம். மேலும் இது 1084 x 2412 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.5 உடன் அனுப்பப்படலாம்.

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2024 நிகழ்வு எப்போது நடக்கும்? உலகின் மிகப்பெரிய டெக் நிகழ்வுகளில் ஒன்றான மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2024 ஆனது 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று பார்சிலோனாவில் தொடங்கும். இந்நிகழ்வில் 'நத்திங் டு சீ' என்கிற பெயரின் கீழ் நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் நத்திங் போன் 2ஏ அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நத்திங் போன் 2ஏ என்ன விலைக்கு வரும்? டிப்ஸ்டர் ரோலண்ட் குவாண்ட்டின் கூற்றுப்படி நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை (இந்திய ருபாய் மதிப்பின்படி) ரூ.36,800 முதல் தொடங்கும். ஆனால் முன்னாக வெளியான தகவல் இது ரூ.33,200 முதல் தொடங்கும் என்கிறது. நத்திங் போன் 2 மாடலே ரூ.40,000 க்குள் என்கிற பட்ஜெட்டிற்கு வந்துவிட்டதால், பெரும்பாலும் இது ரூ.35,000 க்குள் என்கிற விலைக்கே அறிமுகமாகும்!

Photo Courtesy: Roddy Merritt @roddymerritt

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 2a Launch Mobile World Congress 2024 Specifications Price All Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X