Home
Mobile

இப்போ தான் நீ பொழக்க தெரிஞ்ச புள்ள.. பட்ஜெட் விலையில் Nothing Phone 2a.. ஆல் இந்தியன்ஸ் ஆர்டர் போட ரெடியா?

நத்திங் (Nothing) நிறுவனமானது இப்போது தான் ஸ்மார்ட்போன் மார்க்கெட் நிலவரத்தை சரியாக புரிந்துகொள்ள ஆரம்பித்து இருக்கிறது. ஒப்பீட்டளவில் மற்றவர்களை விட வித்தியாசமான ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்களை மட்டுமே நத்திங் போன் 1 மற்றும் நத்திங் போன் 2 ஈர்த்தது.

கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற, மதிப்புமிக்க மற்றும் அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போனை தேடும் பலரும் நத்திங் போன்களின் பக்கமே செல்லவில்லை. இதன் விளைவாகவே அறிமுகமான சில மாதங்களிலேயே நத்திங் போன் 2 (Nothing Phone 2) மீது ரூ.5000 நிரந்தர விலைக்குறைப்பு (Permanent Price cut) அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் Nothing Phone 2a.. ஆல் இந்தியன்ஸ்.. ஆர்டர் போட ரெடியா

நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.44,999 க்கு அறிமுகமானது. தற்போது ரூ.5000 விலைக்குறைப்பை பெற்று ரூ.39,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல நத்திங் போன் 1 (Nothing Phone 1) ரூ.32,999 க்கு அறிமுகமானது, இப்போது ரூ.25,000 க்கு கீழ் என்கிற பட்ஜெட்டிற்கு இறங்கிவந்துள்ளது.

இந்த விலைக்குறைப்பு நடவடிக்கைகள், நத்திங் நிறுவனமானது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் உண்மையான நிலவரத்தை மற்றும் இந்திய வாடிக்கைகையாளர்களின் நிலைப்பாட்டை புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளது என்பதை வெளிப்படையாக சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் நத்திங் நிறுவனமானது விலைக்குறைப்புகளோடு நின்றுவிடப்போவதில்லை. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

பட்ஜெட் விலையில் Nothing Phone 2a.. ஆல் இந்தியன்ஸ்.. ஆர்டர் போட ரெடியா

அது நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) என்கிற பெயரின்கீழ் அறிமுகமாகும் என்றும், இது இந்த வாரமே இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது பிரீமியம் போனாக அறிமுகப்படுத்தப்பட்டு விலைக்குறைப்பை பெற்றுள்ள நத்திங் போன் 2-வின் டோன்டு-டவுன் வெர்ஷனாக (Toned-down Version) இருக்கலாம்.

அதாவது (ஒப்பீட்டளவில்) நத்திங் போன் 2-வை விட குறைவான அம்சங்கள் மற்றும் மலிவு விலை மாடலாக இருக்கலாம். இது பிஐஎஸ் (Bureau of Indian Standards - BIS) சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டுள்ளதால், இதன் இந்திய அறிமுகம் கூடிய விரைவில் நடக்கும் என்பது போல் தெரிகிறது. அறியாதோர்க்ளுக்கு பிஐஎஸ் தளத்தை கடந்த ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் உடனடி வெளியீட்டை காணும்.

பட்ஜெட் விலையில் Nothing Phone 2a.. ஆல் இந்தியன்ஸ்.. ஆர்டர் போட ரெடியா

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் விலையை பொறுத்தவரை, நத்திங் போன் 2ஏ மாடலானது முந்தைய மாடல்களில் நாம் கண்ட கிளிஃப் லைட்டிங் லேஅவுட் (Glyph lighting layout), 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே போன்றவைகளை கொண்டிருக்கலாம். இது சற்றே மாற்றப்பட்ட வடிவமைப்பை பெறும் என்றாலும் கூட, பெரும்பாலும் நத்திங் போன் 1-ல் உள்ள ஹார்ட்வேர்களை தான் பேக் செய்யும் என்பதால் நத்திங் ஃபோன் 2ஏ-வின் விலை நத்திங் போன் 1 உடன் ஒற்றுப்போகலாம்!

இன்னும் சரியாக சொல்லவேண்டுமென்றால்.. நத்திங் போன் 1 தற்போது ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டிற்கு வந்துவிட்டது என்பதை கருத்தில் கொண்டால் இது ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். இது டெக்னோ போவா 5 ப்ரோ (Tecno Pova 5 Pro) மற்றும் இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ (Infinix GT 10 Pro) மாடல்களுக்கான போட்டியாகவும் இருக்கலாம்.

பட்ஜெட் விலையில் Nothing Phone 2a.. ஆல் இந்தியன்ஸ்.. ஆர்டர் போட ரெடியா

அறியாதோர்களுக்கு டெக்னோ போவா 5 ப்ரோ மற்றும் இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஆகிய இரண்டுமே நத்திங் போன் 1 மற்றும் நத்திங் போன் 2 மாடல்களில் உள்ள பேக் பேனலை டிசைனை (Back Panel Design) அப்பட்டமாக காப்பி அடித்து வெளியான மாடல்கள் ஆகும்.

இந்தியாவில் டெக்னோ போவா 5 ப்ரோ ரூ.14,999 க்கும், இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ரூ.21,999 க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆகையால் நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் விலையும் ரூ.25000 க்குள் இருக்க அதிக வாய்ப்புள்ளது. நத்திங் போன் 2ஏ குறித்து மேலதிக தகவல்கள் கிடைக்கும் போது, அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 2a Launch India This Week Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X