Home
Mobile

சும்மா அதிரும் பாருங்க.. சோனி கேமரா.. Dimensity 7200.. 6.7-இன்ச் டிஸ்பிளே.. 8ஜிபி ரேம்.. எந்த போன்?

நத்திங் நிறுவனத்தின் சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் நத்திங் போன் 2ஏ எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது தற்போது வெளியான தகவலின்படி, வரும் 2024 பிப்ரவரி 27-ம் தேதி உலகசந்தையில் நத்திங் போன் 2ஏ மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

குறிப்பாக இந்த நத்திங் போன் 2ஏ மாடல் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான நத்திங் போன் 2ஏ மாடலின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

சும்மா அதிரும் பாருங்க..  6.7-இன்ச் டிஸ்பிளே.. 8ஜிபி ரேம்.. எந்த போன்?

நத்திங் போன் 2ஏ அம்சங்கள் (Nothing Phone 2a Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த நத்திங் போன் 2ஏ மாடல் வெளிவரும். பின்பு இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட்( MediaTek Dimensity 7200 SoC) வசதி உடன் நத்திங் போன் 2ஏ மாடல் அறிமுகமாகும். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த நத்திங் போன் 2ஏ மாடல் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நத்திங் போன் 2ஏ மாடல்.

50எம்பி Samsung ISOCELL S5KGN9 பிரைமரி சென்சார் + அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த நத்திங் போன் 2ஏ மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன உதவியுடன் துல்லியமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பக்கம் இருக்கும் இரண்டு கேமராக்களும் வழக்கம் போல வெர்டிக்கலாக (vertical) இல்லாமல் இந்த மாடலில் ஹரிசான்டலாக (horizontal) பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி Sony IMX615 சென்சார் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நத்திங் போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

5000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த நத்திங் போன் 2ஏ மாடல் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த நத்திங் போன் 2ஏ மாடல். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சும்மா அதிரும் பாருங்க..  6.7-இன்ச் டிஸ்பிளே.. 8ஜிபி ரேம்.. எந்த போன்?

5ஜி, டூயல் 4ஜி வோலட்இ, வைஃபை, ஜிபிஎஸ், உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த நத்திங் போன் 2ஏ மாடலில் உள்ளது. மேலும் இந்த போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக நத்திங் போன் 2ஏ மாடல் ஆனது ரூ.35,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் இந்த நத்திங் போன் 2ஏ மாடலுக்கு அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo courtesy: medium.com, heyitsyogesh

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 2a launch date revealed: check specifications,price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X