யோசிக்காம வாங்குவீங்க.. OLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த போன்?
நத்திங் நிறுவனம் அடுத்து நத்திங் போன் 2ஏ மாடலை தான் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய நத்திங் போன் 2ஏ மாடல் ஆனது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நத்திங் போன் 2ஏ மாடலின் புகைப்படங்கள் சமீபத்தில் தான் ஆன்லைனில் கசிந்தது. அதன்படி டூயல் ரியர் கேமரா, பஞ்ச்-ஹோல் நாட்ச் டிஸ்பிளே, கிளிஃப் லைட்டிங் லேஅவுட் (Glyph lighting layout) போன்ற பல சிறப்பு அம்சங்களுடன் இந்த நத்திங் போன் 2ஏ மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக நத்திங் போன் 2 மாடலை விட மேம்பட்ட அம்சங்களுடன் இந்த நத்திங் போன் 2ஏ மாடல் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த நத்திங் போன் 2ஏ அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
நத்திங் போன் 2ஏ அம்சங்கள் (Nothing Phone 2a specifications): 6.7-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த நத்திங் போன் 2ஏ மாடல் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும்120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த நத்திங் போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் ( MediaTek Dimensity 7200 SoC) வசதியுடன் இந்த நத்திங் போன் 2ஏ மாடல்வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேசமயம் கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங் போன்ற ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது நத்திங் நிறுவனம்.
ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும். குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த நத்திங் போன் 2ஏ மாடல் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த நத்திங் போன் 2 மாடல் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
5000எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த நத்திங் போன் 2ஏ மாடல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் தான் நத்திங் போன் 2ஏ மாடல் வெளிவரும். பின்பு இந்த புதிய நத்திங் போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவும் இதில் உள்ளது.
குறிப்பாக நத்திங் போன் 2ஏ மாடல் இந்தியாவில் ரூ.35,000-க்குள் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமான அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் இந்த நத்திங் போன் 2ஏ மாடல் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








