புதுசு வருதுனு.. அடிமட்ட விலைக்கு விற்பனையாகும் பழைய Nothing போன்.. இப்போ ரூ.6,000 கம்மி ஆகிடுச்சு!
2025 ஆம் ஆண்டில், நத்திங் நிறுவனத்தின் முதல் வெளியீட்டு நிகழ்வு மார்ச் 4 ஆம் தேதியன்று நடக்க உள்ளது. இந்நிகழ்வின் போது நத்திங் போன் 3ஏ சீரிஸின் கீழ் நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) என 2 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) ஸ்மார்ட்போன் ஆனது முன் எப்போதும் இல்லாத தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) ஆனது "நம்ப முடியாத விலை" என்கிற டேக்லைன் உடன் நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனை மிகவும் மலிவான விலைக்கு விற்பனை செய்கிறது.

பிளிப்கார்ட்டில் தற்போது நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், அதன் அசல் விளையான ரூ.25,999 க்கு பதிலாக 15% தள்ளுபடியை பெற்று ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது. கூடவே ரூ.2000 கேஷ்பேக் / கூப்பன் ஆபரும் கிடைக்கிறது. இதன்கீழ் நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.19,999 க்கு கொண்டுவர முடியும்.
நத்திங் போன் 2ஏ-வின் டிசைன் மற்றும் முக்கிய அம்சங்கள்: வடிவமைப்பை பொறுத்தவரை, பேக் பேனலில் கிடைமட்டமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள 2 கேமராக்களை கொண்டுள்ளது; இந்த கேமராக்கள் ஒரு சர்குலர் ஐலேண்டில் உட்பொதிக்கப்பட்டுள்ளன. மேலும் பேக் பேனலில் மூன்று கிளிஃப் எல்இடி ஸ்ட்ரிப்ஸ்களை (Glyph LED strips) கொண்டுள்ளது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் ஆனது தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு திறனுக்கான ஐபி54 ரேட்டிங் உடன் வருகிறது. டிஸ்பிளே பொறுத்தவரை, இது FHD+ ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் HDR10 ஆதரவு உடனான 6.7-இன்ச் பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது
ஸ்லிம் பெசல்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது டிஸ்பிளேவில் உள்ள பஞ்ச்-ஹோல் கட்அவுட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃ பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் உள்ளது. இதன் டூயல் ரியர் கேமரா செட்டப்பில் OIS-க்கான ஆதரவுடன் 50எம்பி மெயின் கேமரா சென்சார் + 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா உள்ளது.
ப்ராசஸரை பொறுத்தவரை, நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி7200 ப்ரோ சிப்செட் உடன் வருகிறது. இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கிறது. மேலும் இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
மார்ச் 4 ஆம் தேதி அறிமுகமாகும் நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்த ஸ்மார்ட்போன் 6.8-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை (AMOLED Display) பேக் செய்யலாம். மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் சிப்செட் (Snapdragon 7s Gen Chipset) மூலம் இயக்கப்படலாம்.
கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் (Telephoto lens) உடனான 8எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் (Ultra wide angle lens) இடம்பெறலாம். முன்பக்கத்தில் 32ம்பி செல்பீ கேமரா இருக்கலாம். கடைசியாக இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில்எக்ஸ் தளம் வழியாக நத்திங் பகிர்ந்துள்ள டீஸர் படத்தின் படி, நத்திங் போன் 3ஏ சீரீஸில், ஐபோன்களில் உள்ள ஆக்ஷன் பட்டன் (Action Button) போன்ற ஒரு பட்டனை பார்க்க முடிகிறது. இந்த பட்டனின் பயன்கள் என்ன என்பது பற்றிய எந்த விளக்கமும் இல்லை. இருப்பினும் இது கேமராவை லான்ச் செய்து போட்டோவை கிளிக் செய்ய பயன்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








