Home
Mobile

அட்றா சக்கை.. இருட்டில் மின்னும் பேக் பேனல்.. பட்ஜெட் விலையில் புதிய Nothing போன்.. அக்.30 அறிமுகம்!

நத்திங் (Nothing) நிறுவனத்தின் கீழ் அறிமுகமான ஸ்மார்ட்போன்களிலேயே "ஒட்டுமொத்தமாக" நல்ல வரவேற்ப்பை பெற்றது நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) தான். கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் வெற்றிக்கு முக்கிய காரணம் இதன் விலை நிர்ணயம் தான். ஆரம்ப கால லீக்ஸ்கள் இது ரூ.40,000-ஐ ஒட்டிய பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறின. ஆனால் இது ரூ.25,000 பட்ஜெட்டில் அறிமுகமாகி பட்ஜெட் வாசிகளுக்கு ஷாக் கொடுத்தது மட்டுமின்றி, இந்திய மார்க்கெட்டில் ஹிட்டும் அடித்தது.

இதற்கிடையில் கூடிய விரைவில், நத்திங் போன் 2ஏ கம்யூனிட்டி எடிஷன் (Nothing Phone 2a Community Edition) அறிமுகமாகும் என்றும், இதில் மிகவும் வித்தியாசமான ஒரு அம்சம் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது எப்போது அறிமுகமாகும்? அப்படி என்ன வித்தியாசமான அம்சத்தை பேக் செய்யும்? இதன் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இதோ விவரங்கள்:

இருட்டில் மின்னும் பேக் பேனல்.. பட்ஜெட் விலையில் புதிய Nothing போன்!

நத்திங் போன் 2ஏ கம்யூனிட்டி எடிஷன் எப்போது அறிமுகமாகும்? எக்ஸ் தளத்தில் நத்திங் நிறுவனம் பகிந்துள்ள ஒரு டீஸர் வழியாக நத்திங் போன் 2ஏ கம்யூனிட்டி எடிஷன் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அக்டோபர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

நத்திங் போன் 2ஏ கம்யூனிட்டி எடிஷனில் அபப்டி என்ன வித்தியாசமான அம்சம் இடம்பெறவுள்ளது? நத்திங் வெளியிட்டுள்ள டீஸரில், ஒரு மின்மினிப் பூச்சி தரையில் இறங்கும் வீடியோவும், பின்னர் அது திரைக்கு வெளியே நடந்து செல்வதற்கு முன், அதனுடைய பின்பகுதி பச்சை நிறத்தில் ஒளிர்வது போலவும் காட்டுகிறது.

இந்த டீஸர், நத்திங் போன் 2ஏ கம்யூனிட்டி எடிஷன் ஆனது வழக்கத்திற்கு மாறாக பச்சை நிற பிரதிபலிப்பை வெளிப்படுத்தும் என்பதை உறுதிப்படுத்துகிறது. இன்னொரு டீஸர் இந்த ஸ்மார்ட்போன், இருட்டான இடங்களில் பச்சை நிறத்தில் ஒளிரும் நியான் பேக் பேனலை பெறும் என்கிற யூகங்களை கிளப்பி உள்ளது.

இது சாதாரண நத்திங் போன் 2ஏ மாடலுக்கும், புதிய கம்யூனிட்டி எடிஷனுக்கும் இடையேயான வித்தியாசத்தை சுட்டிக்காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதா அல்லது இது வெறுமனே ஒரு மார்க்கெட்டிங் தந்திரமா என்பதை அக்டோபர் 30 ஆம் தேதி நடக்கும் அறிமுகத்தின் போது தான் தெரிய வரும்.

நத்திங் போன் 2ஏ கம்யூனிட்டி எடிஷன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? கண்டிப்பாக இது "ஸ்டாண்டர்ட்" நத்திங் போன் 2ஏ மாடலை விட அதிகமான விலை நிர்ணயத்தையே பெறும். நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 2ஏ மாடலானது ரூ.23,999 க்கு அறிமுகமானது. இதை வைத்து பார்க்கும் போது, கம்யூனிட்டி எடிஷன் ரூ.25,000 - ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்ப்பது நல்லது.

மேலும் "ஸ்டாண்டர்ட்" நத்திங் போன் 2ஏ மடலுக்கும், வரவிருக்கும் புதிய கம்யூனிட்டி எடிஷனுக்கும் அம்சங்கள் அடிப்படையில் பெரிய வித்தியாசம் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் ஆனது தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு திறனுக்கான ஐபி54 ரேட்டிங் உடன் வருகிறது. டிஸ்பிளே பொறுத்தவரை, இது FHD+ ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் HDR10 ஆதரவு உடனான 6.7-இன்ச் பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது

ஸ்லிம் பெசல்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது டிஸ்பிளேவில் உள்ள பஞ்ச்-ஹோல் கட்அவுட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃ பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் உள்ளது. இதன் டூயல் ரியர் கேமரா செட்டப்பில் OIS-க்கான ஆதரவுடன் 50எம்பி மெயின் கேமரா சென்சார் + 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா உள்ளது.

ப்ராசஸரை பொறுத்தவரை, நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி7200 ப்ரோ சிப்செட் உடன் வருகிறது. இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கிறது. மேலும் இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கடைசியாக இது ஆண்ட்ராய்டு 14 அவுட் ஆஃப் தி பாக்ஸ் அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.5 கொண்டு இயங்குகிறது. (Photo Courtesy: Nothing X Page)

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 2a Community Edition Launching on October 30 All You Need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X