Home
Mobile

செஞ்சுட்டான்யா Nothing.. இருளில் ஜொலிக்கும் புதுமையான போன்.. எப்போது அறிமுகம்? நாள் குறிச்சாச்சு.. இதான் தேதி

நத்திங் (Nothing) நிறுவனம் என்றாலே புதுமையின் உச்சம், வியப்பின் மிச்சம் என்று போற்றி பாராட்டும் வகையில், நிறுவனம் அதன் புதுமையான ஸ்மார்ட்போன்களால் உலக ஸ்மார்ட்போன் பிரியர்களை கவர்ந்து வருகிறது. இத்தகைய நிறுவனம் இப்போது, யாரும் எதிர்பார்த்திடாத வகையில் மீண்டும் ஒரு புதுமையான ஸ்மார்ட்போன் சாதனத்தை அதன் மொபைல் வரிசையில் அறிமுகம் செய்யவுள்ளது. இதன் டீசர் தகவலை பார்த்தே, உலக ரசிகர்கள் எப்போது இந்த போன் வெளிவரும்? வந்த உடனே யோசிக்காமல் இதை ஆர்டர் செய்துவிட வேண்டுமென்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். Nothing நிறுவனத்தின் புதிய போன் பற்றிய முழு தகவல் இதோ.

கடந்த மார்ச் மாதம் நத்திங் நிறுவனம் வெளியிட்ட ஒரு தகவலில், நத்திங் பிராண்ட் ஒரு புதுமையான போனை உருவாக்கி வருவதாக அறிவித்திருந்தது. இந்த போனை நத்திங் நிறுவனம் 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் அறிமுகம் செய்யுமென்றும் அன்றே கூறியிருந்தது கவனிக்கத்தக்கது. புதுமையான போனை, நத்திங் நிறுவனம் நத்திங் போன் 2a (Nothing Phone 2a Series) வரிசையில் அறிமுகம் செய்யுமென்று கூறியிருந்தது.

செஞ்சுட்டான்யா Nothing.. இருளில் ஜொலிக்கும் புதுமையான போன்..

இருளில் ஜொலிக்கும் புதுமையான போன்.. சொன்னபடியே Nothing செஞ்சுட்டான்யா:

பார்ப்பதற்கு, இந்த சாதனம் வழக்கமான நத்திங் போன் 2a போல இருக்கலாம், ஆனால், நத்திங் ரசிகர்கள் எதிர்பார்க்கும் புதுமை இதில் நிச்சயம் இருக்குமென்று நிறுவனம் தகவல்களை கொஞ்சம் கொஞ்சமாக கசியவிட்டது. சொன்னபடியே, நத்திங் நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை நத்திங் போன் 2a கம்யூனிட்டி எடிஷன் (Nothing Phone 2a Community Edition) என்று பெயரிட்டுள்ளது.

Nothing Phone (2a) Community Edition ஸ்மார்ட்போன் மாடல் பெரும்பாலும் பார்ப்பதற்கு நத்திங் போன் 2a போல காட்சியளித்தாலும், இது இருளில் ஒளிரும் ரேடியம் டிஸைனுடன் (glow in the dark radium design) வருகிறது என்பதை சமீபத்திய லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது. நத்திங் போன் 2a டிசைன் போலவே இதன் ரியர் பேனல் வடிவமைப்பு காணப்படுகிறது. ஆனால், நத்திங் போன் 2a வரிசையில் இதுவரை இல்லாத ஒருவகையான நியான் க்ரீன் (Neon green) நிறத்தில் இருப்பதை காண்பிக்கிறது.

நத்திங் போன் 2a கம்யூனிட்டி எடிஷன் விபரங்கள் (Nothing Phone 2a Community Edition Details):

உண்மையை சொல்ல போனால், இந்த போனின் பேக் பேனல் டிசைன் ரேடியம் பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த போனை நத்திங் நிறுவனம் ரேடியம் க்ரீன் (radium green) நிறத்தில் பிரதிபலிக்கிறது. ரேடியம் என்பது, வெளிச்சத்தில் இருந்து ஒளியை ஈர்த்துக்கொண்டு, இருளில் பச்சை நிற ஒளியை மீண்டும் பிரதிபலிக்கும் பணப்பை கொண்ட ஒரு பொருளாகும். இதை தனது போனில் பயன்படுத்தி புதுமையை காண்பித்துள்ளது Nothing.

இந்த போனில் நத்திங் நிறுவனம் வித்தியாசமான வால்பேப்பர் வடிவமைப்பை உருவாக்கியுள்ளது. அதேபோல, இதன் பேக்கேஜிங் டிஸைனையும் நிறுவனம் இப்போது முடிந்துவிட்டது. நத்திங் போன் 2a கம்யூனிட்டி எடிஷன் சாதனத்தின் பேக்கேஜிங் பாக்ஸ் டிசைன் (Packaging box design) எப்படி இருக்கும் என்பதை காண்பிக்கும் லீக் புகைப்படங்களும் இப்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இறுதியாக, நிறுவனம் இப்போது இந்த போனுக்கான விளம்பரங்களையும் வெளியிட துவங்கிவிட்டது. இதில் மின்மினிப்பூச்சியை Nothing சுட்டிக்காண்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நத்திங் போன் 2a கம்யூனிட்டி எடிஷன் அறிமுக தேதி (Nothing Phone 2a Community Edition Launch Date):

'ஃபைண்ட் யுவர் லைட்' (Find Your Light) என்ற ஸ்லோகன் உடன் நத்திங் போன் 2a கம்யூனிட்டி எடிஷன் போனின் விளம்பரங்கள் வெளிவர துவங்கியுள்ளது. இந்த புதுமையான போனின் அறிமுகம் வரும் அக்டோபர் 30, 2024 ஆம் தேதி இந்திய நேரத்தின் படி 4:30PM மணியளவில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இருளில் ஜொலிக்கும் ஒரு புதுமையான போனை நீங்கள் வாங்க ஆசைப்பட்டால் அக்டோபர் 30ம் தேதியை மறந்துவிடாதீர்கள்.

இந்த Nothing Phone (2a) Community Edition பற்றி கூடுதலாக அறிந்துகொள்ள, நத்திங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான இந்த in.nothing.tech/pages/community-edition லிங்கை கிளிக் செய்யவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 2a Community Edition An Innovative Phone That Glows In The Dark Launching On October 30 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X