Home
Mobile

ஆளுக்கு 1 ஆர்டர்.. 45W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. எந்த போன்?

நத்திங் நிறுவனம் அடுத்து நத்திங் போன் 2ஏ எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இந்த போன் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் TUV சான்றிதழ் பெற்றுள்ளது இந்த நத்திங் போன் 2ஏ மாடல்.

அதாவது TUV சான்றிதழ் தளத்தில் A142 என்ற மாடல் நம்பருடன் இந்த நத்திங் போன் 2ஏ மாடல் காணப்பட்டுள்ளது. மேலும் அந்த தளத்தில் இந்த போனின் சார்ஜிங் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. அதாவது 45 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த நத்திங் போன் 2ஏ மாடல் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுக்கு 1 ஆர்டர்.. 45W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த போன்?

எனவே நத்திங் போன் 2ஏ மாடலை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் ஏற்கனவே ஆன்லைனில் வெளியான இந்த நத்திங் போன் 2ஏ மாடலின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

நத்திங் போன் 2ஏ அம்சங்கள் (Nothing Phone 2a specifications): டூயல் ரியர் கேமரா, பஞ்ச்-ஹோல் நாட்ச் டிஸ்பிளே, கிளிஃப் லைட்டிங் லேஅவுட் (Glyph lighting layout) போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த நத்திங் போன் 2ஏ மாடல். மேலும் தனித்துவமான வடிவமைப்புடன் இந்த போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் ( MediaTek Dimensity 7200 SoC) வசதியுடன் இந்த நத்திங் போன் 2ஏ மாடல் வெளிவரும். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும்.

குறிப்பாக ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் இந்த ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 8ஜிபி ரேம் + 28ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த நத்திங் போன் 2ஏ மாடல் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு கொண்டுள்ளது இந்த நத்திங் ஸ்மார்ட்போன்.

இந்த நத்திங் போன் 2ஏ மாடல் 6.7-இன்ச் அமோலெட் டிஸ்பிளே ( AMOLED display) வசதியுடன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

ஆளுக்கு 1 ஆர்டர்.. 45W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த போன்?

50எம்பி Samsung ISOCELL S5KGN9 பிரைமரி கேமரா + 50எம்பி ISOCELL JN1 அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த நத்திங் போன் 2ஏ மாடல்வெளிவரும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

4290எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த நத்திங் போன் 2ஏ மாடல் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டால்பி ஆடியோ வசதி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த நத்திங் போன் 2ஏ மாடல் மாடல் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போன் இந்தியாவில் ரூ.35,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo courtesy: @Sunniton/Weibo, sportskeeda, notebookcheck

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 2A charging speed has been released with TUV certification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X