மே 2ஆம் தேதி இருக்கு.. ரூ.19,999 பட்ஜெட்ல OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ட்ரூலென்ஸ் என்ஜின்.. எந்த மாடல்?
அமோலெட் டிஸ்பிளே, ட்ரூலென்ஸ் என்ஜின் கேமரா, கொரில்லா கிளாஸ் புரொடெக்சன், 45W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், அல்ட்ரா பிரீமியம் டிசைன் கொண்ட நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) போனின் புதிய எடிஷன் விற்பனைக்கு வரவிருக்கிறது.
இந்த நத்திங் போன் ஏற்கனவே பிளாக் மற்றும் ஒயிட் கலர்களில் வெளியாகி விற்பனையில் சக்கைப்போடு போட்டது. இப்போது, ப்ளூ எடிஷன் அறிமுகமாகி இருக்கிறது. இந்த எடிஷனின் விற்பனை வரும் மே2ஆம் தேதி தொடங்குகிறது. பிரீமியம் லுக்கில் பின்னிப்பெடல் எடுக்கும் இந்த போனின் முழு விவரங்கள் இதோ.

நத்திங் போன் 2ஏ அம்சங்கள் (Nothing Phone 2a Specifications): இந்த நத்திங்கில் 6.7 இன்ச் (2412×1084 பிக்சல்கள்) புல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட அமோலெட் (AMOLED) பேனல் மாடலாகும். கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் வருகிறது.
அதுமட்டுமல்லாமல், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. மேலும், எச்டிஆர்ட்10 பிளஸ் (HDR10+) மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொண்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.
ஒஐஎஸ் (OIS) மற்றும் ஈஐஎஸ் (EIS) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. பிரத்யேகமாக ஆக்சன் மோட் (Action Mode) சப்போர்ட் கொண்டுள்ளது. 1080p வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ட்ரூலென்ஸ் என்ஜின் (TrueLens Engine) கொண்ட 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இதுபோக அல்ட்ரா எச்டிஆர் (Ultra XDR), நைட் மோட் (Night Mode), மோஷன் கேப்ச்சர் (Motion Capture) மற்றும் போர்ட்ராய்டு ஆப்டிமைசர் (Portrait Optimiser) போன்ற பீச்சர்கள் வருகின்றன. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.
நத்திங் ஓஎஸ் 2.5 (Nothing OS 2.5) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 ப்ரோ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 Pro 4nm) சிப்செட் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் IP54 தர ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரியின் விலை ரூ.23,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரியின் விலை ரூ.25,999ஆகவும் இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரியின் விலை ரூ.27,999ஆக இருக்கிறது. இருப்பினும், மே 2ஆம் தேதி விற்பனையின் போது பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
ஆகவே, இந்த நத்திங் போன் 2ஏ ப்ளூ எடிஷனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை ரூ.4000 டிஸ்கவுண்ட் உடன் ரூ.19,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த போனை பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். டிரான்ஸ்பரன்ட் மற்றும் எல்இடி பேனல் கொண்ட பேனல் வேண்டுமானால், இந்த மாடலை தேர்ந்தெடுங்கள்.


Click it and Unblock the Notifications