இதுக்கு ரூ.4000.. அதுக்கு ரூ.5000.. புது Nothing Phone 3a சீரீஸ் வர்ற நேரத்துல 2 பழைய மாடல்கள் விலை குறைப்பு!
நத்திங் போன் 3ஏ சீரிஸ் (Nothing Phone 3a Series) ஸ்மார்ட்போன்கள் ஆனது மார்ச் 4 அன்று இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன்கீழ் நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இதற்கிடையில் நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a Series) சீரிஸின் கீழ் அறிமுகமான நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) மற்றும் நத்திங் போன் 2ஏ பிளஸ் (Nothing Phone 2a Plus) ஆகிய 2 மாடல்களுமே, பிரபல இ-காமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் (Flipkart) வழியாக ஆபர் விலையில் வாங்க கிடைக்கின்றன.

தற்போது பிளிப்கார்ட் வலைதளத்தில் நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.4000 டிஸ்கவுன்ட்டின் கீழ் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் எம்ஆர்பி விலை ரூ.25,999 ஆகும். ஆனாலும் இது 15% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது
இதேபோல நத்திங் போன் 2ஏ பிளஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.5000 டிஸ்கவுன்ட்டின் கீழ் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் எம்ஆர்பி விலை ரூ.29,999 ஆகும். ஆனாலும் இது 16% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது
புதிய நத்திங் போன் 3ஏ சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.23,999 முதல் ரூ.25,999 வரைக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் அதன் ஹைஎண்ட் வேரியண்ட் ஆன நத்திங் போன் 3ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,999 முதல் ரூ.29,999 வரைக்குள் இருக்கலாம்.
நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி7200 ப்ரோ சிப்செட், 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ், 50எம்பி + 50எம்பி டூயல் ரியர் கேமரா, 32எம்பி செல்பீ, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5,000mAh பேட்டரி.
நத்திங் போன் 2ஏ பிளஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 1080 x 2412 பிக்சல்கள், 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெப்ரெஷ் ரேட், 394பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5ப்ரொடெக்ஷன் உடனான 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி (AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
இது ஆக்டாகோர் 4 என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7350 ப்ரோ 5ஜி சிப்செட்டை பேக் செய்கிறது. கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி + 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது, முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் சாம்சங் JN1 செல்பீ ஷூட்டர் உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, இது 50W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு (Fast Charging Support) மற்றும் 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவு (Reverse Wired Charging Support) உடனான 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.
நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.8 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளேவை பேக் செய்யலாம். சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 (Snapdragon 7s Gen 3) சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இது ஆண்ட்ராய்டு 15 ஆப்ரேட்டிங் சிஸ்டம்-ஐ அடிப்படையாக கொண்ட நத்திங் ஓஎஸ் 3.1 (Nothing OS 3.1) உடன் வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இது கிடைமட்டமாக அமைக்கப்பட்ட நத்திங் நிறுவனத்தின் முதல் ட்ரிபிள் ரியர் கேமரா ஸ்மார்ட்போனாக இருக்கலாம்.
அதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் மற்றும் 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறலாம். செல்பீ கேமராவை பொறுத்தவரை இதில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம். இது டிஸ்பிளேவின் ஹோல்-பஞ்ச் கட்அவுட்டில் வைக்கப்படும். பேட்டரியை பொறுத்தவரை, இதை 45W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAhபேட்டரி பேக் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications