Nothing-ன் 2 புதிய போன்கள்.. ஒன்னு பட்ஜெட்.. இன்னொன்னு பிரீமியம்.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
நத்திங் போன் 1 (Nothing Phone 1) மற்றும் நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களுமே "ஆஹா ஓஹோ" என்று சொல்லும் அளவிலான வரவேற்பை பெறவில்லை. நத்திங் போன் 1 ஆவது டிரான்ஸ்பிரென்ட் டிசைன் உடன் வரும் முதல் ஸ்மார்ட்போன் என்கிற காரணத்தால் எதிர்பார்ப்புகளை எகிற செய்த்தது.
ஆனால் அது பில்ட்-அப் செய்த அளவிற்கு டிரான்ஸ்பிரென்ட் டிசைனுடன் (Transparent Design) வரவில்லை என்பதால் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். இதன் விளைவு நத்திங் போன் 2 அறிமுகத்தின் போது எதிரொலித்தது. ரூ.44,999 க்கு அறிமுகமான நத்திங் போன் 2-வை யாரும் கண்டுகொள்ளாத காரணத்தினால் அதன் விலை ரூ.39,999 ஆக குறைக்கப்பட்டது.

"கூட்டத்தில் தனித்து தெரிய வேண்டும்; வழக்கமான ஸ்மார்ட்போனை போல இல்லாமல் சற்றே வித்தியாமாக இருக்க வேண்டும்" என்கிற எண்ணம் கொண்ட வாடிக்கையாளர்களை தவிர்த்து வேறு யாரையுமே இவ்விரு நத்திங் ஸ்மார்ட்போன்கள் ஈர்க்கவில்லை. இதற்கிடையில் தான் பட்ஜெட் விலையில் புதிய நத்திங் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்; அது நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) மாடலாக இருக்கும் என்கிற தகவல் வெளியானது!
நத்திங் போன் 2ஏ எப்போது அறிமுகமாகும்? பட்ஜெட்-பிரிவு என்றால் இது என்ன விலைக்கு அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? நத்திங் போன் 3 எப்போது அறிமுகமாகும்? இதன் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

நத்திங் போன் 2ஏ, நத்திங் போன் 3 எப்போது அறிமுகமாகும்? நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான @saaaanjjjuuu எக்ஸ் தளம் வழியாக பகிர்ந்த தகவலின்படி, நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படலாம். அதாவது 2024 ஜனவரி மற்றும் மார்ச் மாதத்திற்கு இடையில் அறிமுகம் செய்யப்படலாம்.
மறுகையில் உள்ள நத்திங் நிறுவனத்தின் அடுத்த பிரீமியம் ஸ்மார்ட்போனான நத்திங் போன் 3 மாடல் 2024 ஆம் ஆண்டின் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் தவிர்த்து 2024-ல் சிஎம்எப் (CMF) பிராண்டிங் வழியாக நத்திங் பட்ஸ் 2 ப்ரோ (Nothing Buds 2 Pro) என்று அழைக்கப்படும் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸும் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? நத்திங் போன் 2ஏ மாடலானது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் எஃப்எச்டி பிளஸ் (FHD+) ரெசல்யூஷன் உடனான 6.7-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை (AMOLED Display) கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual Rear Camera Setup) பேக் செய்யலாம். அதில் 1/1.5 இன்ச் சென்சார் அளவு (1/1.5 inch sensor size) மற்றும் 1.0 மைக்ரான் பிக்சல் அளவு (1.0 micron pixel size) உடனான 50 மெகாபிக்சல் சாம்சங் எஸ்5கேஜிஎன்9 மெயின் கேமரா இடம்பெறலாம்.
இரண்டாவது சென்சார் ஆக 1/2.76 இன்ச் சென்சார் அளவு (1/2.76 inch sensor size) மற்றும் 0.64 மைக்ரான் பிக்சல் அளவு (0.64 micron pixel size) உடனான 50 மெகாபிக்சல் சாம்சங் எஸ்5கேஜேஎன்1 அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராவும் இடம்பெறலாம். செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை 32 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்615 கேமரா (Sony IMX615 camera) இடம்பெறலாம்.
நத்திங் போன் 2ஏ என்ன விலைக்கு அறிமுகமாகும்? இந்தியாவில் நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் ரூ.29,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் உள்ள நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.42,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








