Home
Mobile

யாரு விடுவா? குறைந்த விலையில் நத்திங் மற்றும் CMF போன்கள்.. அள்ளி தரும் பிளிப்கார்ட் சேல்..

பண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்கள் மொபைல், டிவி, ஸ்மார்ட்வாட்ச், ஸ்பீக்கர்கள் எனப் பல சாதனங்களுக்குத் தள்ளுபடி வழங்க தொடங்கிவிட்டன. அதுவும் பிளிப்கார்ட் தளத்தில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் (Flipkart Big Billion Days Sale) எனும் சிறப்பு விற்பனை ஆனது வரும் செப்டம்பர் 27-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்த பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) மற்றும் நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) மாடல்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நத்திங் போன் 2ஏ ஆனது இந்தியாவில் ரூ.23,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.18,999 விலையில் நத்திங் போன் 2ஏ மாடல் வாங்க கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

யாரு விடுவா? குறைந்த விலையில் நத்திங் மற்றும் CMF போன்கள்..

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் எனும் சிறப்பு விற்பனையில் சிஎம்எப் போன் 1 ஆனது ரூ.12,999 விலையில் வாங்க கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிஎம்எப் போன் 1 ஆனது ரூ.15,999 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சிறப்பு விற்பனையில் இந்த இரண்டு போன்களும் கம்மி விலையில் விற்பனைக்கு வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது நத்திங் போன் 2ஏ அம்சங்களைப் பார்க்கலாம்.

நத்திங் போன் 2ஏ அம்சங்கள் (Nothing Phone 2a Specifications): 6.7-இன்ச் பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்தது. மேலும் ஃபுல்எச்டி பிளஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10 சப்போர்ட் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி மெயின் கேமரா சென்சார் + 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான நத்திங் போன் 2ஏ போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீயோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.

மீடியாடெக் டைமன்சிட்டி7200 ப்ரோ சிப்செட் உடன் நத்திங் போன் 2ஏ மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் இந்த டைமன்சிட்டி7200 ப்ரோ சிப்செட். ஆண்ட்ராய்டு 14 மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

யாரு விடுவா? குறைந்த விலையில் நத்திங் மற்றும் CMF போன்கள்..

இன்-டிஸ்பிளே ஃ பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் கொண்டு வெளிவந்துள்ளது நத்திங் போன் 2ஏ மாடல். அதேபோல் இந்த போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. இதுதவிர விர்ச்சுவல் ரேம் வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது நத்திங் நிறுவனம்.

5000mAh பேட்டரி உடன் நத்திங் போன் 2ஏ மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. மேலும் இந்த போன் பேக் பேனலில் மூன்று கிளிஃப் எல்இடி ஸ்ட்ரிப்ஸ்களையும் (Glyph LED strips) கொண்டுள்ளது. பின்பு இது தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு திறனுக்கான ஐபி54 ரேட்டிங் உடன் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Nothing Phone 2a and CMF Phone 1 are available for purchase at discounted prices in festive deal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X