Home
Mobile

இப்பவே புது போன் வாங்காதீங்க.. வெயிட் பண்ணுங்க வருது தரமான Nothing போன்.! சூப்பரான அம்சங்கள்.!

இந்தியாவில் நத்திங் நிறுவனம் புதிய நத்திங் போன் 2 மாடலை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதாவது நத்திங் போன் 2 மாடல் பிரீமியம் பிரிவில் களமிறங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இந்தியாவில் நத்திங் போன் 1 மாடலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது இதன் மேம்பட்ட வெர்ஷனாக நத்திங் போன் 2 அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாகத் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இப்பவே புது போன் வாங்காதீங்க: வெயிட் பண்ணுங்க வருது தரமான Nothing போன்

குறிப்பாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ள நத்திங் போன் 2 மாடல் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணைய தளத்தில் வெளிவந்த இந்த நத்திங் போன் 2 மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்இ 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த நத்திங் போன் 2 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த புதிய போன் சேட்டிலைட் கனெக்டிவிட்டி ஆதரவுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இதுதவிர NothingOS 1.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.

நத்திங் போன் 2 மாடல் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + அல்ட்ரா வைடு கேமரா + மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே தரமான கேமராவுடன் இந்த போன் வெளிவரும். பின்பு பிரத்யேக எல்இடி க்லிம்ஃப் டிசைன், சிவப்பு நிற எல்இடி இண்டிகேட்டர் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

இப்பவே புது போன் வாங்காதீங்க: வெயிட் பண்ணுங்க வருது தரமான Nothing போன்

8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய நத்திங் போன் 2 மாடல். குறிப்பாக ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டு இந்த புதிய நத்திங் போன் 2 மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

இணையத்தில் வெளிவந்த தகவலின்படி 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த நத்திங் போன் 2 மாடல் வெளிவரும். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த போன் வெளிவரும். மேலும் இந்த போன் குறைந்த எடையுடன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 2 will be launched soon with Snapdragon 8+ Gen 1 chipset : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X