Home
Mobile

இந்தியாவே எதிர்பார்க்கும் ஒரு சூப்பர் ஸ்மார்ட்போன்.! விலை மற்றும் அம்சங்கள் வெளியானது..!

நத்திங் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள நத்திங் போன் 2 மாடல் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதாவது நத்திங் போன் 2ஆனது தனித்துவமான வடிவமைப்பு, சக்திவாய்ந்த சிப்செட், தரமான கேமரா எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நத்திங் போன் 1 மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் ஜூலை 11-ம் தேதி அறிமுகமாகும் இந்த நத்திங் போன் 2 மாடலுக்கும் அதைவிட அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நத்திங் போன் 2 போனின் விலை மற்றும் அம்சங்கள் என அனைத்து தகவலும் இணையத்தில் வெளியாகி உள்ளது. இப்போது இது சார்ந்த தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்தியாவே எதிர்பார்க்கும் ஒரு சூப்பர் ஸ்மார்ட்போன்.!

நத்திங் போன் 2 ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

இந்த நத்திங் போன் 2 ஆனது சிறந்த மென்பொருள் வசதியுடன் அறிமுகமாகும். அதாவது இந்த மாடலில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த புதிய போன் சேட்டிலைட் கனெக்டிவிட்டி ஆதரவுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இதுதவிர NothingOS 1.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். குறிப்பாக இதன் சிப்செட் பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

பிரத்யேக எல்இடி க்லிம்ஃப் டிசைன், சிவப்பு நிற எல்இடி இண்டிகேட்டர் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு இந்த புதிய நத்திங் போன் 2 அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனில் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

50எம்பி பிரைமரி கேமராவுடன் இந்த நத்திங் போன் 2 மாடல் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவே எதிர்பார்க்கும் ஒரு சூப்பர் ஸ்மார்ட்போன்.!

நத்திங் போன் 2 மாடலுடன் வழங்கப்படும் யுஎஸ்பி டைப்-சி கேபிள், நத்திங் போன் 1 உடன் வழங்கப்பட்டதை விட முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதாவது நத்திங் போன் 2 உடன் வழங்கப்படும் யுஎஸ்பி டைப்-சி கேபிள் ஆனது சில்வர் நிற ஃபினிஷ் செய்யப்பட்டு, வெளிப்புறம் டிரான்ஸ்பேரன்ட் டிசைன் கொண்டிருக்கிறது. மேலும் டைப்-சி கேபிள் நத்திங் பிரான்டிங் கொண்டிருக்கிறது. கேபிள் நிறம் வெள்ளை நிறத்தில் உள்ளது.

குறிப்பாக இந்த நத்திங் போன் 2 மாடல் 4700 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகமாகும் என்வே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த நத்திங் போன் 2 மாடல் வெளிவரும்.

மேலும் இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி, இந்த நத்திங் போன் 2 மாடல் ஆனது ரூ.65,000 விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

photo courtesy: @onleaks x @smartprix, 91mobiles.com

Best Mobiles in India

English summary
Nothing Phone 2 will be launched in India on July 11: Check prices, design, specifications, pictures : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X