Home
Mobile

அவசரப்பட்டியே குமாரு.. Nothing Phone 2-வின் ஆரம்ப விலை கேட்டு ஷாக்.. ப்ரீ-ஆர்டர் செஞ்சவங்க எல்லாம் பாவம்!

நத்திங் நிறுவனத்தின் இரண்டாவது ஸ்மார்ட்போனான நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஆனது அடுத்த வார தொடக்கத்தில், இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் வருகிற ஜூலை 11 ஆம் தேதியன்று இந்தியா உட்பட உலகளவில், அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இருப்பினும், அறிமுகத்திற்கு முன்பாகவே இது வெறும் ரூ.2000 க்கு பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக ப்ரீ-ஆர்டர் (Pre-order) செய்ய கிடைக்கிறது, அதாவது நத்திங் போன் 2-வின் அசல் விலை மற்றும் விரிவான அம்சங்கள் அறிவிக்கப்படும் முன்னரே அது முன்பதிவு செய்ய கிடைக்கிறது.

அவசரப்பட்டியே குமாரு.. Nothing Phone 2-வின் ஆரம்ப விலை கேட்டு ஷாக்!

இதற்கிடையில் பிரபலமான டிப்ஸ்டர்களில் ஒருவரான யோகேஷ் ப்ரார், வரவிருக்கும் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயத்தை வெளியிட்டு, அதை ப்ரீ-ஆர்டர் செய்தவர்களின் மத்தியில் "அவரசப்பட்டு ப்ரீ-ஆர்டர் செஞ்சிட்டோமோ.. கொஞ்சம் வெயிட் பண்ணி இருக்கலாமோ?" என்கிற குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்.

ஏனென்றால் யோகேஷ் ப்ராரின் கூற்றுப்படி, நத்திங் போன் 2-வின் பட்ஜெட் ஆனது ரூ.45,000-க்குள் (Under Rs.45,000 Budget ) இருக்கும். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவில் இது ரூ.42,000 அல்லது ரூ.43,000 என்கிற ஆரம்ப விலையில் (Starting Price) அறிமுகம் செய்யப்படலாம்.

நத்திங் போன் 2 ஆனது ரூ.40,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வரும் என்று நம்பி ப்ரீ-ஆர்டர் செய்த்தவர்களுக்கு இந்த தகவல் சற்றே ஷாக்கிங் ஆகத்தான் இருக்கும். ஒருவேளை இந்த விலை உண்மையாக மாறினால், நத்திங் போன் 2 ஆனது பிக்சல் 7ஏ (Pixel 7a) மற்றும் ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 11R) போன்ற மாடல்களுடன் கடுமையாக போட்டியிடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

உறுதிப்படுத்தப்பட்ட அம்சங்களை பொறுத்தவரை, நத்திங் போன் 2 ஆனது ஃபுல் எச்டி+ ரெசல்யூஷன் உடனான சற்றே பெரிய 6.7-இன்ச் டிஸ்பிளேவை பேக் செய்யும். இது நத்திங் போன் 1-ஐ போலவே ஓஎல்இடி பேனலையே பயன்படுத்தும். இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நத்திங் ஓஎஸ் 2.0 (அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ்) கொண்டு இயங்கும்.

மேலும் புதிய நத்திங் ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் மூலம் மூலம் இயக்கப்படும் எனபதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, எந்த விவரங்களும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடனான 50-மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சார் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனுடன் அல்ட்ரா-வைட் லென்ஸ் உடனான 50-எம்பி சாம்சங் ஐசோசெல் ஜேஎன்1 சென்சாரும் இடம்பெறலாம். முன்பக்கத்தை பொறுத்தவரை 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம். நத்திங் போன் 2-வில் 4,700mAh பேட்டரி பேக் செய்யப்படும் என்பது அதிகாரப்பூர்வமான உறுதிசெய்யப்பட்டு விட்டது. இருப்பினும் ஃபாஸ்ட் சார்ஜிங் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

பெரும்பாலும் இது 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவை பெறலாம். கூடவே இது 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடனும் வரலாம். எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி ரேட்டிங் மற்றும் இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரையும் பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Phone 2 Starting Price Rs 42000 or Rs 43000 in India Leaked Before July 11 Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X