அள்ளிக்கோ.. அடிமட்ட ஆபர் விலையில் Nothing Phone 2 விற்பனை.. எல்லாம் Nothing Phone 3 வரும் நேரம்!
நத்திங் நிறுவனம் வருகிற ஜூலை 1 ஆம் தேதியன்று அதன் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன நத்திங் போன் 3 மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட்டில் "பழைய" நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது பிளிப்கார்ட்டில் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.37,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம், இது கடந்த 2023 ஜூலை மாதத்தில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டபோது இந்த விலை ரூ.44,999 ஆக இருந்தது.

எதிர்பார்த்த அளவிற்கு "வியாபாரம்" ஆகவில்லை என்பதாலும், "இந்த போனுக்கு இவ்வளவு விலையா?" என்கிற விமர்சனங்களாலும், 2023 டிசம்பர் மாத வாக்கில் நத்திங் போன் 2 மீது அதிகாரப்பூர்வமாக ரூ.5000 என்கிற நிரந்தர விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டது. பின்னர் அது ரூ.39,999 க்கு வாங்க கிடைத்தது.
இப்போது நத்திங் போன் 3 மாடலின் வருகையை முன்னிட்டு, பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் மீது மேலும் ரூ.2000 டிஸ்கவுண்ட்டை அறிவித்து, ரூ.37,999 க்கு விற்பனை செய்கிறது. அறியாதோர்களுக்கு நத்திங் போன் 3 மாடலில் நத்திங் போன் மாடலில் இருப்பதை போன்ற கிளிஃப் இன்டர்ஃபேஸ் இருக்காது.
ஒருவேளை நீங்கள் கிளிஃப் இன்டர்ஃபேஸ்-க்காகவே நத்திங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் பிளிப்கார்ட்டின் இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளவும். ஏனென்றால் நத்திங் போன் 3 மாடலில் பழைய கிளிஃப் இன்டர்பேஸ்-க்கு பதிலாக புதிய கிளிஃப் மேட்ரிக்ஸ் இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிசைன் மில்க் (Design Milk) உடனான ஒரு நேர்காணலில், நத்திங் நிறுவனத்தின் டிசைன் ஹெட் ஆன ஆடம் பேட்ஸ், நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் உள்ள கிளிஃப் மேட்ரிக்ஸ் ஆனது கிளிஃப் இன்டர்பேஸ்-ன் கஸ்டமைசேஷனை தக்கவைத்து கொள்ளவும், அதை மிகவும் திறமையாக மாற்றவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தினார்.

பேக் பேனலின் மேல் வலது மூலையில் வட்டமாக தோன்றும் சிறிய கிளிஃப் மேட்ரிக்ஸ் ஆனது முந்தைய மாடல்களில் காணப்பட்ட கிளிஃப் இன்டர்பேஸ்-ன் பெரிய எல்இடி லைட் ஸ்ட்ரிப்களை மைக்ரோ-எல்இடிகளின் சிறிய கிளஸ்டர் கொண்டு மாற்றுகிறது.
இந்த புதிய வடிவமைப்பு பிக்சல்-லெவல் அனிமேஷன்கள், சிம்பாலிக் விஷூவல்ஸ் மற்றும் சவுண்ட் மற்றும் யூசர் ஆக்ஷன்களுடன் சின்க் செய்யபட்ட உடனான ரியாக்டிவ் லைட்டிங்கை ஆதரிப்பதாக கூறப்படுகிறது. கிளிஃப் மேட்ரிக்ஸ் ஆனது அதன் மைக்ரோ-எல்இடி கிளஸ்டர் வடிவமைப்பு காரணமாக அதிக நிரலாக்கத்தை (Programmability) வழங்குகிறது என்று பேட்ஸ் கூறுகிறார்.
நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் வரையிலான அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் ஃபுல்-எச்டி எல்டிபிஓ ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இது குவால்காம் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்டை பேக் செய்கிறது.
கேமராக்களை பொறுத்தவரை, நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனானது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 1/1.56-இன்ச் சோனி IMX890 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (EIS) ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் மெயின் + 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா உள்ளது.
முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமரா உள்ளது. நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் எல்இடி லைட்ஸ் உடனான கிளிஃப் இன்டர்ஃபேஸ் உள்ளது. கடைசியாக, பேட்டரியை பொறுத்தவரை இது 45W வயர்டு சார்ஜிங் மற்றும் 5W க்யூஐ வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுஉடனான 4700எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications