நிமிடத்துக்கு நிமிடம் ஆர்டர் பிச்சிக்குது.. விஸ்வரூப வரவேற்பில் நத்திங் போன்.. பிளிப்கார்ட் ஆஃபர் அந்த மாதிரி!
இந்திய மார்கெட்டே அதிரும்படி நத்திங் (Nothing) நிறுவனத்தின் நத்திங் போன் 2 (Nothing Phone 2) விற்பனை பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் பிரம்மாண்டமாக தொடங்கிவிட்டது. நிமிடத்துக்கு நிமிடம் ஆர்டர்கள் பிச்சியெடுக்கிறது. இப்படி, விஸ்வரூப வரவேற்பு பெறுவதற்கு அந்த போனில் என்ன இருக்கிறது?
இந்திய ஸ்மார்ட்போன் பிரியர்கள் மத்தியில் டிரான்ஸ்பரன்ட் டிசைன், பேக் பேனல் லைட்ஸ், 12 ஜிபி ரேம், சோனி சென்சார் கேமரா, ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் என்று ஒவ்வொரு அம்சத்திலும் வியப்பை ஏற்படுத்திய மாடல் என்றால், அது நத்திங் போன் 2 போன் மட்டுமே. இந்த போனின் ப்ரீ-புக்கிங் பாஸ்களை வாங்கவே 5 மணி நேரம் க்யூவில் நின்று மக்கள் வாங்கி சென்றனர்.

இப்போது, விற்பனைக்கே வந்துவிட்டது என்றால், லேசில் விட்டுவிடுவார்களா என்ன? ஒவ்வொரு நிமிடமும் ஆர்டர் விண்ணை முட்டுகிறது. இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நத்திங் நிறுவனமே எதிர்பார்த்திருக்காது. இந்த நேரத்தில் அந்த போனில் என்ன இருக்கிறது? என்பதை தெரிந்துகொள்வோம்.
நத்திங் போன் 2 அம்சங்கள் (Nothing Phone 2 Specifications): இந்த போன் 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இதில் 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் இருக்கிறது.
டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த போனின் பேக் பேனலில் டிரான்ஸ்பரன்ட் டிசைன், எல்இடி லைட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் நத்திங் ஒஎஸ் 2.0 (NothingOS 2.0) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 (Qualcomm Snapdragon 8+ Gen 1) சிப்செட் வருகிறது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி என்று மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நத்திங் போன் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது.
அந்த வகையில், சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா + சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சாருடன் கூடிய அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. 32 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4,700mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் இருக்கிறது. மேலும், IP54 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளிட்ட ஃபிளாக்ஷிப் அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நத்திங் போன் ஓயிட் (White), டார்க் கிரே (Dark Grey) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
இந்த போனின் விலையை பொறுத்தவரையில், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 44,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 49,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 54,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஜூலை 21) பிளிப்கார்ட்டில் (Flipkart) விற்பனை தொடங்கிவிட்டது. ஆக்சிஸ் வங்கி மற்றும் சிட்டி வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.3,000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








