Nothing கதை முடிஞ்சது.. வெறும் ரூ.15000 க்கு RGB LED ஸ்ட்ரிப் பேக் பேனல்.. 16GB ரேம்.. என்ன மாடல்?
நத்திங் 1 மற்றும் நத்திங் 2 போன்களில் உள்ள மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, அவைகளின் பேக் பேனலில் உள்ள எல்இடி லைட் ஸ்ட்ரிப்ஸ் தான். அதற்கு வேட்டு வைக்கும்படியாக வெறும் ரூ.15,000 பட்ஜெட்டில்.. பேக் பேனலில் ஆர்ஜிபி எல்இடி ஸ்ட்ரிப்ஸ்களுடன் ஒரு புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நாம் இங்கே பேசுவது - டெக்னோ நிறுவனத்தின் புதிய 5ஜி மாடலான டெக்னோ போவா 5 ப்ரோ (Tecno Pova 5 Pro) ஸ்மார்ட்போனை பற்றிதான். இன்னும் சில தினங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் டெக்னோ போவா 5 ப்ரோ மாடலனது சத்தமின்றி இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதலில் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதும் கூட ஒருவகையில் நல்லது தான். அப்போது தான் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே டெக்னோ போவா 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களையும், அதன் விலை நிர்ணயத்தையும் நம்மால்முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.
டீஸர் விளம்பரங்களில் சொல்லப்பட்டபடியே டெக்னோ போவா 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது அதன் பேக் பேனலில், பார்ப்பவர்களை சட்டென ஈர்க்ககூடிய ஒரு கவர்ச்சியான எல்இடி ஸ்ட்ரிப்பை (LED Strips) கொண்டுள்ளது. நத்திங் போன்களில் செயல்படுவதை போலவே, இது நோட்டிஃபிக்கேஷன் லைட் (Notification Light) ஆக செயல்படும்.
இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் கேமிங் செய்யும் போது, மொபைல் சார்ஜிங் செய்யும் போது மற்றும் உள்வரும் அழைப்புகள் அல்லது மெசேஜ்கள் போன்ற அறிவிப்புகளின் போது, இதன் பேக் பேனலில் உள்ள ஆர்ஜிபி லைட்டிங்-எனேபிள்டு ஆர்க் இன்டர்பேஸ் ஆனது வெவ்வேறு வண்ணங்களில் ஒளிரும்.
மற்ற அம்சங்களை பொறுத்தவரை, டெக்னோ போவா 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் மென்மையான டிஸ்பிளே அனுபத்தை வழங்கும் 120ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் ஆனது பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, டெக்னோ போவா 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் மற்றும் ஒரு ஏஐ லென்ஸ் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டைமன்சிட்டி 6080 (Dimensity 6080) ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.
8ஜிபி ரேம் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனிற்கு 8ஜிபி அளவிலான விர்ச்சுவல் ரேம் ஆதரவும் உள்ளது. அறியாதோர்களுக்கு விர்ச்சுவல் ரேம் என்றால் மொபைலில் பயன்படுத்தப்படாத இன்டர்னல் ஸ்டார்ஜில் இருந்து தற்காலிகமாக ரேம்-ஐ கடன் வாங்க உதவும் ஒரு அம்சமாகும். இது தடையற்ற மல்டி டாஸ்கிங்கை உறுதிசெய்யும்.
இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இதில் 256ஜிபி உள்ளது. டெக்னோ போவா 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 68W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவை கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஹைஓஎஸ் 13 (HiOS) மூலம் இயங்குகிறது.
ஸ்மார்ட்போனின் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்க 12,979mm² வெப்பச் சிதறல் பகுதியுடன் (Heat dissipation area) வரும் இந்த டெக்னோ ஸ்மார்ட்போன் ஆனது 2,820mm² வேப்பர் சேம்பரையும் (Vapor chamber) கொண்டுள்ளது. கூடுதலாக, இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் (Dual stereo speakers) உள்ளன .
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, டெக்னோ போவா 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஆதரவு, 5ஜி இணைப்பு, வைஃபை 802.11ஏசி, ப்ளூடூத், ஜிபிஎஸ், சார்ஜிங் மற்றும் டேட்டா பரிமாற்றத்திற்கான யூஎஸ்பிஐ டைப்-சி போர்ட் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் போன்றவைகள் உள்ளன.
விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, டெக்னோ போவா 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இந்தோனேசிய சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.16055 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆக இது இந்தியாவில் ரூ.15,000 டூ ரூ.20,000 பட்ஜெட்டில் தான் அறிமுகமாகும் என்பதை வெளிப்படையாக புரிந்துகொள்ள முடிகிறது.


Click it and Unblock the Notifications








