நிமிடத்துக்கு நிமிடம் ஆர்டர் பிச்சிக்குது.. விலையை குறைத்த Nothing.. எந்த மாடல்?
நத்திங் நிறுவனம் ஒருவழியாக தனது நத்திங் போன் 2 (Nothing Phone 2) போனின் விலையைக் குறைத்துள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ், ஐபோன், சாம்சங் நிறுவனங்களுக்கு போட்டிக் கொடுக்கும் வகையில் நத்திங் நிறுவனம் தனது நத்திங் போன் 2 போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
குறிப்பாக நத்திங் போன் 2 மாடலுக்கு இப்போது கூட நல்ல வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த நத்திங் போன் 2 மாடல் வெளிவந்தது. இந்நிலையில் சத்தமின்றி நத்திங் போன் 2 போனின் விலையை குறைத்துள்ளது நத்திங் நிறுவனம்.

அதன்படி 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட நத்திங் போன் 2 ஆனது முன்பு ரூ.44,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் 128ஜிபி மெமரி கொண்ட நத்திங் போன் 2 மாடலை ரூ.39,999 விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட நத்திங் போன் 2 மாடல் முன்பு ரூ.49,999 விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் ரூ.44,999-க்கு வாங்கக் கிடைக்கிறது. பின்பு 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட நத்திங் போன் 2 மாடல் முன்பு ரூ.54,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் 512ஜிபி மெமரி கொண்ட நத்திங் போன் 2 மாடலை ரூ.49,999-க்கு வாங்க முடியும்.

குறிப்பாக பிளிப்கார்ட் மற்றும் குரோமா தளங்களில் இந்த நத்திங் போன் 2 மாடலை குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டு இந்த அசத்தலான நத்திங் போன் 2 வெளிவந்துள்ளது.
240Hz டச் சாம்பிளிங் ரேட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட், கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த போனின் பேக் பேனலில் டிரான்ஸ்பரன்ட் டிசைன், எல்இடி லைட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 (Qualcomm Snapdragon 8+ Gen 1) சிப்செட் உடன் நத்திங் போன் 2 வெளிவந்துள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் நத்திங் ஒஎஸ் 2.0 (NothingOS 2.0) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி மெயின் கேமரா (Sony IMX890 Sensor)+ 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா (Samsung JN1 Sensor) என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த நத்திங் போன் 2. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த அசத்தலான நத்திங் போன் வெளிவந்துள்ளது.
நத்திங் போன் 2 மாடலில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4,700mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் இருக்கிறது. மேலும் IP54 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளிட்ட ஃபிளாக்ஷிப் அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நத்திங் போன் ஓயிட் (White), டார்க் கிரே (Dark Grey) ஆகிய 2 கலர்களில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








