கியூகட்டி நின்ற கூட்டம்.. மிரளவிட்ட ப்ரீ-ஆர்டர்.. அந்தவொரு போனை வாங்க துடிக்கும் மக்கள்.. எந்த மாடல்?
இந்தியாவில் முதல்முறையாக ஒரு போனின் ப்ரீ-ஆர்டர் பாஸ்களை வாங்க மட்டுமே 5 மணி நேரம் கியூவில் நின்ற ஸ்மார்ட்போன் பிரியர்களின் செயல் அந்த போன் மீதான எதிர்பார்ப்பை விண்ணை முட்ட செய்துள்ளது. ஆப்பிள் போன்களுக்கே கிடைக்காத வரவேற்பை மற்றொரு போன் பெற்றிருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்படி, ஒட்டுமொத்த போட்டி ஸ்மார்ட்போன் நிறுவனங்களையும் மூக்கில் விரல் வைக்க செய்திருக்கிறது, நத்திங் நிறுவனத்தின் நத்திங் போன் 2 (Nothing Phone 2). இந்த போன் விற்பனைக்கு வருவதற்கு ஒரு வாரம் மட்டுமே இருக்கும் வேளையில், இப்போது மிகப்பெரும் சம்பவத்தை செய்துள்ளது. இவ்வளவு பில்ட்-அப்புக்கு மத்தியில் அந்த போனில் அப்படி என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வோம்.

நத்திங் போன் 2 அம்சங்கள் (Nothing Phone 2 Specifications): இந்த நத்திங் போன் 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 1600 நிட்ஸ் பீக் பிக்சல் பிரைட்னஸ் வருகிறது.
எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் ( Corning Gorilla Glass) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கர்வ் வடிவிலான பேக் பேனலில் எல்இடி லைட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 (Qualcomm Snapdragon 8+ Gen 1) சிப்செட் வருகிறது.
அதோடு நத்திங் ஒஎஸ் 2.0 (NothingOS 2.0) வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி என்று மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த நத்திங் போன் 2 டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது.
சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா + சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. 32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4,700mAh பேட்டரி வருகிறது. 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.
IP54 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன. இந்த நத்திங் போன் ஓயிட் (White) மற்றும் டார்க் கிரே (Dark Grey) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 44,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 49,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 54,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன் ஜூலை 21ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
இந்த போனுக்கான ப்ரீ-ஆர்டர் அடுத்த சில நாட்களில் பிளிப்கார்ட்டில் தொடங்கவிருக்கிறது. இந்த சூழலில், இன்று (ஜூலை 15) லண்டன், நியூயார்க் மற்றும் பெங்களூருவில் நத்திங் டிராப்ஸ் ஈவெண்ட் (Nothing Drops Event) தொடங்கியது. இந்த ஈவெண்ட்டில் ப்ரீ-ஆர்டர் பாஸ்கள் விற்பனை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதனை அறிந்த நத்திங் பிரியர்கள் சோஹோ ஸ்டோர்களில் (SOHO Stores) கூட்டம் கூட்டமாக குவிந்தனர். ப்ரீ-ஆர்டர் பாஸ்களை அடித்து பிடித்து வாங்கி சென்றனர். பெங்களூருவில் உள்ள சோஹோ ஸ்டோரில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிந்தது மட்டுமல்லாமல், பல மணி நேரம் காத்திருந்து, ப்ரீ-ஆர்டர் பாஸ்கள் கையோடு வாங்கி சென்றுவிட்டனர்.
இந்த நத்திங் போனை முதல் ஆளாக வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் அங்கு குவிந்தது தெரிகிறது. குறிப்பாக லண்டனில் கிலோ மீட்டர்கள் கணக்கில் மக்கள் கியூவில் நின்று பாஸ்களை வாங்குகின்றனர். இவ்வளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நத்திங் போன் 2 ஜூலை 21ஆம் தேதி எவ்வளவு பெரிய சாதனை படைக்கும் என்பது அன்றே தெரியும்.


Click it and Unblock the Notifications








