சொன்ன மாதிரியே.. எல்லோரும் வாங்கும் விலை.. 50MP + 50MP கேமரா.. 12ஜிபி ரேம்.. நத்திங் போன் 2 அறிமுகம்!
நத்திங் போன் 2 (Nothing Phone 2) இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது. எதிர்பார்த்ததை போலவே நத்திங்கின் இரண்டாவது ஸ்மார்ட்போனானது ஜூலை 11 இரவு 8.30 மணிக்கு நடந்த வெளியீட்டு நிகழ்வில் அறிமுகமானது. நத்திங் போன் 2-வின் இந்திய விலை மற்றும் அம்சங்கள் என்ன? இதோ விவரங்கள்:
நத்திங் போன் 2 அம்சங்கள்: டூயல் சிம் (நானோ) ஆதராவுடன் வரும் நத்திங் போன் 2 ஆனது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.0 (அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ்) கொண்டு இயங்குகிறது. இது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (1080 x 2412 பிக்சல்ஸ்) எல்டிபிஓ ஓஎல்இடி (LTPO OLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

மேலும் இதன் டிஸ்பிளே, 1ஹெர்ட்ஸ் மற்றும் 120ஹெர்ட்ஸ்-க்கு இடையே மாறக்கூடிய அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், 240ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எஸ்ஜிஎஸ் லோ ப்ளூ லைட் மற்றும் எச்டிஆர்10+ போன்ற ஆதரவுகளை கொண்டுள்ளது. முன்னரே உறுதிப்படுத்தப்பட்டபடி இது அட்ரெனோ 730 ஜிபியு உடனாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
மூன்று ஹை ரெசல்யூஷன் மைக்ரோஃபோன்கள் மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்புடன் வரும் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனானது டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. அதில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா உள்ளது.
இதன் மெயின் கேமராவானது 1/1.56-இன்ச் சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சார், எஃப்/1.88 அபெர்க்ஷர் , ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (ஓஐஎஸ்), எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (இஐஎஸ்) உடன் வருகிறது. இதன் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராவானது இஐஎஸ், 1/2.76-இன்ச் சாம்சங் ஜேஎன்1 சென்சார், 114-டிகிரி வியூ, எஃப்/2.2 அபெர்க்ஷர் உடன் வருகிறது. இரண்டாம் நிலை கேமராவனது மேக்ரோ கேமராவாகவும் (4செமீ) வேலை செய்யும்.
முன் பக்கத்தை பொறுத்தவரை, 1/2.74-இன்ச் சோனி ஐஎம்எக்ஸ் 615 சென்சாரை கொண்ட 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. நத்திங் போன் 1 மாடலை போலவே, இதுவும் தனித்துவமான கிளைஃப் இன்டர்பேஸை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது வைஃபை 6, 5ஜி, 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 5.3, என்எஃப்சி, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், நேவிக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி ஆகியவைகளை கொண்டுள்ளது
இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆதரவுடன் வரும் நத்திங் போன் 2 ஆனது 4,700எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இது 45W பிபிஎஸ் வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கிறது (இதன் சார்ஜிங் பிரிக் தனியாக விற்கப்படும்). நிறுவனத்தின் கூற்றிப்படி, இது வெறும் 55 நிமிடங்களில் ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்யும்.
நத்திங் போன் 2-வை 15W க்யூஐ வயர்லெஸ் சார்ஜிங் மூலம் சார்ஜ் செய்யலாம், து கேபிள்கள் இல்லாமல் ஸ்மார்ட்போனை 130 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும். நத்திங் போன் 2 ஆனது 5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. 201.2 கிராம் எடையுள்ள இந்த ஸ்மார்ட்போன் தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது.
நத்திங் போன் 2 விலை: இந்தியாவில் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனானது மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸிக் 8 ஜிபி + 128 ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.44,999 க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.49,999 க்கும், ஹை எண்ட் வேரியண்ட் ஆன 12ஜிபி + 512ஜிபி ஆப்ஷன் ரூ.54,999 க்கும் வாங்க கிடைக்கும்.
இவைகள் டார்க் க்ரே மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும். வருகிற ஜூலை 21 அன்று பிளிப்கார்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாக நத்திங் போன் 2 விற்பனைக்கு வரும். ப்ரீ ஆர்டர் பாஸ் வைத்திருப்பவர்கள் இன்று முதல் ஆர்டர்களை செய்யலாம்.


Click it and Unblock the Notifications








