ஆள விட்றா சாமி! Nothing Phone 2 விலையை கேட்டு தெறிச்சு ஓடிய இங்கிலாந்து மக்கள்.. இந்திய விலை எப்படி இருக்கும்?
நத்திங் போன் 2 (Nothing Phone 2) - இந்த 2023 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இது வருகிற 11 அன்று நடக்கும் மெய்நிகர் நிகழ்வின் (Virtual Event) போது அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளியீட்டு தேதி நெருங்க-நெருங்க நத்திங் போன் 2 பற்றிய முக்கிய தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அப்படியாக தற்போது, நத்திங் போன் 2-வின் ரேம் (RAM) மற்றும் ஸ்டோரேஜ் (Storage) ஆப்ஷன்கள் மற்றும் கலர் (Colour) ஆப்ஷன்களுடன் சேர்த்து அதன் ஐரோப்பிய விலை நிர்ணயமும் (European Price Details) ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.

நத்திங் போன் 2-வின் விலையை கேட்டு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மற்றும் நத்திங் நிறுவனத்தின் சொந்த நாடான இங்கிலாந்து மக்கள் மிரண்டு விட்டனர் என்றே கூறலாம். ஏனென்றால், கிடைக்கப்பெற்ற தகவலின்படி, சிப்செட் மேம்படுத்தல் (Chipset Upgrade) காரணமாக நத்திங் போன் 2-வின் விலை அதன் முன்னோடியை விட (அதாவது நத்திங் போன் 1-ஐ விட) விலை அதிகமாக இருக்கும்.
டீலாப்ஸ் (Dealabs) வழியாக சமீபத்திய அறிக்கையின்படி, நத்திங் போன் 2 ஆனது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகும். அதில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி வேரியண்ட் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.65,600 க்கும் மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி வேரியண்ட் ஆனது தோராயமாக ரூ.76,500 க்கும் அறிமுகமாகும்.
இந்த அளவிலான விலை அதிகரிப்புக்கு காரணம் நத்திங் போன் 2-வில் இடம்பெறவுள்ள சிப்செட் தான். நினைவூட்டும் வண்ணம் இது ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் ( Snapdragon 8+ Gen 1 SoC) மூலம் இயங்கும் என்பது அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 1 ஆனது ஸ்னாப்டிராகன் 778ஜி பிளஸ் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
நத்திங் போன் 2-வின் இந்திய விலை நிர்ணயமும் (India Price) அதிகமாகத்தான் இருக்குமா என்று கேட்டால்.. நிச்சயமாக அதிகமாகத்தான் இருக்கும் மற்றும் அதற்கும் கூட நத்திங் போன் 2-வில் இடம்பெறவுள்ள சிப்செட் தான் முக்கிய காரணமாக இருக்கும். இருப்பினும் இந்திய விலையானது ஐரோப்பிய விலையை போல இருக்காது.
இந்தியாவில் தற்போது நத்திங் போன் 1 ஆனது ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக ரூ,29,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆக நத்திங் போன் 2 ஆனது அதிகபட்சமாக ரூ.40,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் வெளியாகும்.
முன்னரே குறிப்பிட்டபடி, நத்திங் போன் 2-வின் வெளியீட்டு நிகழ்வானது வருகிற ஜூலை 11 ஆம் தேதி நடக்கவுள்ளது. அறிமுகத்திற்கு பின்னர், அது பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும் என்பதையும் நத்திங் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை - டீலாப்ஸ் அறிக்கை - இது கருப்பு (Black) மற்றும் வெள்ளை (White) நிறங்களில் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications