Home
Mobile

என்ன பொசுக்குனு விற்பனைக்கு வந்துடுச்சு.. வெறும் ரூ.2000 கொடுத்து Nothing Phone 2-வை சொந்தமாக்குவது எப்படி?

முன்னதாக, நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஜூலை 11 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன் பின்னர் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனைக்கு வருமென்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுருந்தது.

அதுமட்டுமின்றி - கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலையில் அறிமுகமான நத்திங் போன் 1-ன் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக வரும் - நத்திங் போன் 2 ஆனது ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் (Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC) மூலம் இயக்கப்படுவதும் அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வெறும் ரூ.2000 கொடுத்து Nothing Phone 2-வை சொந்தமாக்குவது எப்படி?

மேலும் நத்திங் போன் 2 ஆனது ஒப்பீட்டளவில் நத்திங் போ 1-ஐ விட பெரிய பேட்டரி மற்றும் பெரிய டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜூலை 11 அறிமுகத்திற்கு முன்னதாகவே நத்திங் போன் 2 ஆனது பிளிப்கார்ட் வழியாக ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட்டில், நத்திங் போன் 2-க்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக மைக்ரோசைட்டின்படி, இந்த போனிற்கான முன்பதிவுகள், வருகிற ஜூன் 29 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் திறந்துவிடப்படும். இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் திரும்பப்பெறக்கூடிய வைப்புத் தொகையாக ரூ.2,000 செலுத்த வேண்டியிருக்கும்.

அதை தொடர்ந்து ஜூலை 11 ஆம் தேதி இரவு 9 மணி முதல் ஜூலை 20 ஆம் தேதி இரவு 11:59 மணி வரையிலாக, ரூ.2000 கொடுத்து முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான ஸ்டோரேஜ் ஆப்ஷன் மற்றும் கலர் ஆப்ஷனை தேர்வுசெய்து, போனிற்கான மீதமுள்ள தொகையை செலுத்தி நத்திங் போன் 2-வை தங்களுக்கு முழுமையாக சொந்தமாக்கி கொள்ளலாம்.

ரூ.2000 கொடுத்து முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நத்திங் இயர் ஸ்டிக்கை 50 சதவீத தள்ளுபடி விலையில் வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். இதுதவிர்த்து நத்திங் போன் 2 மீது ​​முன்னணி வங்கிகளிடம் இருந்து உடனடி கேஷ்பேக் சலுகைகள் கிடைக்கும் என்பதையும் நத்திங் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை (ஐரோப்பியாவில் இருந்து கிடைக்கப்பெற்ற லீக்ஸ் தகவலின்படி), நத்திங் போன் 2 இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம். 8ஜிபி ரேம் + 256ஜிபி வேரியண்ட்டின் விலை 729 யூரோவாக (அதாவது இந்திய ருபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ. 65,600) ஆக இருக்கலாம்.

அதே சமயம் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.76,500 க்கு அறிமுகமாகலாம். மேலும் நத்திங் போன் 2 ஆனது அதன் முன்னோடியை போலவே (அதாவது நத்திங் போன் 1-ஐ போலவே) கருப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்படலாம்.

அம்சங்களை பொறுத்தவரை, இது ஃபுல்எச்டி+ (2400 x 1080 பிக்சல்ஸ்) அல்லது அதற்கும் அதிகமான ரெசல்யூஷனை கொண்ட 6.7-இன்ச் டிஸ்பிளே, 4,700எம்ஏஎச் பேட்டரி போன்றவைகளை பேக் செய்யலாம். நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனுக்கு 3 வருட முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்களும் (Major Android Updates), 4 வருட செக்யூரிட்டி அப்டேட்களும் (Security Updates) கிடைக்கும் என்றும் நத்திங் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Nothing Phone 2 India Pre Order in Flipkart Starts From June 29 Customers to Pay Just Rs 2000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X