முழுசா ரூ.7000 டிஸ்கவுண்ட்.. அனல் பறக்கும் விற்பனை.. ஒரேவொரு நாளுக்கு மட்டும்.. இதுக்குமேல யாரு விடுவா?
இந்திய மார்கெட்டில் பிரத்யேக டிசைன், பேக் பேனல் ஸ்டிரிப் லைட்ஸ், 12ஜிபி ரேம், 50எம்பி கேமரா என்று பிரம்மாண்டமாக வெளியாகிய நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஸ்மார்ட்போனுக்கு சுதந்திர தின சேல் (Independence Day Sale) தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
நத்திங் போன் 2 அம்சங்கள் (Nothing Phone 2 Specifications): இந்த போன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. அதோடு 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் பேக் பேனலில் டிரான்ஸ்பரன்ட் டிசைன், எல்இடி ஸ்டிரிப் லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நத்திங் போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் நத்திங் ஒஎஸ் 2.0 (NothingOS 2.0) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 (Qualcomm Snapdragon 8+ Gen 1) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது
8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நத்திங் போன் 2 டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டிருக்கிறது.
அதன்படி, சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சார் கொண்ட அல்ட்ரா வைடு கேமரா இருக்கிறது. 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4,700mAh பேட்டரி இருக்கிறது.
இந்த பேட்டரிக்கு 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. IP54 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ட் வருகிறது. மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், டைப் - சி ஆடியோ போர்ட் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி வருகிறது. இந்த நத்திங் போன் 2 டார்க் கிரே (Dark Grey), ஓயிட் (White) ஆகிய 2 கலர்களில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ. 44,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ. 49,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ. 54,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 21ஆம் தேதியில் இருந்து பிளிப்கார்ட்டில் (Flipkart) விற்பனை தொடங்கி சக்கைபோடு போட்டு வருகிறது. இந்த விற்பனையை மேலும் அனல் பறக்க வைக்கும் விதமாக சுதந்திர தின விற்பனை சலுகையை நத்திங் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகை மூலம் ஐசிஐசிஐ, கோடக் மற்றும் எச்டிஎஃசி வங்கி கார்டுகளுக்கு ரூ.3000 கேஷ்பேக் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், ரூ.4,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் கொடுக்கப்படும்.
அந்த வகையில் மொத்தமாக ரூ.7000 தள்ளுபடியுடன் நத்திங் போன் 2 வாங்கிக்கொள்ள முடியும். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








