ஆஃபரே வேற.. பொசுக்குனு ரூ.3000 கட்.. 12GB ரேம்.. 50MP கேமரா.. 4700mAh பேட்டரி.. பிச்சிக்குது ஆர்டர்!
நத்திங் பிரியர்களை அறக்க பறக்க செய்யும் விதமாக பிளிப்கார்ட் பிக் பில்லியல் டேஸ் விற்பனையில் (Flipkart Big Billion Days Sale) நத்திங் போன் 2 (Nothing Phone 2) மாடலுக்கு முழுதாக ரூ.3000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
நத்திங் போன் 2 அம்சங்கள் (Nothing Phone 2 Specifications): இந்த போனில் 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 240Hz டச் சாம்பிளிங் ரேட், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் வருகிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நத்திங் போனின் பேக் பேனலானது, டிரான்ஸ்பரன்ட் டிசைன், எல்இடி லைட்ஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 (Qualcomm Snapdragon 8+ Gen 1) சிப்செட் வருகிறது.
சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சார் கொண்ட அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. இந்த கேமராவில் 4சிஎம் மேக்ரோ ஆப்சன் (4cm Macro Option), லைவ் எச்டிஆர் (Live HDR) சப்போர்ட் வருகிறது. அதேபோல சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் (Sony IMX615 Sensor) கொண்ட 32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
அதோடு நத்திங் ஒஎஸ் 2.0 (NothingOS 2.0) மற்றும் அட்ரினோ 730 ஜிபியு (Adreno 730 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய மூன்று மாடல்கள் விற்பனைக்கு வருகின்றன.
இந்த நத்திங் போனில் 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4,700mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 5W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. IP54 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ட் கொண்டுள்ளது. அதோடு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), இன் டிஸ்பிளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (In-display Optical Fingerprint Scanner) உள்ளிட்ட அம்சங்களும் வருகின்றன.
பேட்டரியுடன் சேர்த்து, இந்த போன் 201 கிராம் எடைக் கொண்டுள்ளது. இந்த நத்திங் போன் 2 ஓயிட் (White) மற்றும் டார்க் கிரே (Dark Grey) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.44,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 49,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 54,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் பிளிப்கார்ட்டில் (Flipkart) விற்பனை தொடங்கி சக்கைப்போடு போட்டது.
இந்த விற்பனை மீண்டும் சூடுபிடிக்க வைக்கும் விதமாக, பிளிப்கார்ட் பிக் பில்லியல் டேஸ் விற்பனையை முன்னிட்டு ரூ.3000 உடனடி தள்ளுபடியும், ரூ.32,600 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் பெற்றுக்கொள்ளலாம். ஆகவே, இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.41,999க்கு வாங்கிக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








