Home
Mobile

புது டிசைனில் Nothing Phone 2.. சைலன்ட் ஆக ஆரம்பித்த ப்ரீ-ஆர்டர்.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

நத்திங் (Nothing) நிறுவனத்தின் இரண்டாவது ஸ்மார்ட்போனான நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஆனது நேற்று முதல், அதாவது ஜூலை 29 ஆம் தேதி முதல் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக முன்பதிவு (Pre-order) செய்ய கிடைக்கிறது.

புது டிசைனில் நத்திங் போன் 2: வருகிற ஜூலை 11 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் நத்திங் போன் 2-வின் டிசைன் (Design) அதிகாரபூர்வமாக டீஸ் செய்யப்பட்டுள்ளது. லண்டனை தளமாக கொண்ட நத்திங் நிறுவனம் தனது சமூக ஊடக சேனல்களின் வழியாக நத்திங் போன் 2-வின் வடிவமைப்பை வெளிப்படுத்தும் டீஸர் புகைப்படமொன்றை (Teaser Photo) வெளியிட்டுள்ளது.

புது டிசைனில் Nothing Phone 2.. சைலன்ட் ஆக ஆரம்பித்த ப்ரீ-ஆர்டர்!

வெளியான டீஸர் புகைப்படத்தின் வழியாக நத்திங் போன் 2-வின் பின்புறத்தை (Back Panel) "ஓரளவு" பார்க்க முடிகிறது. அதன் மூலம் நத்திங் போன் 2-வின் பேக் கிளாஸ் எட்ஜுகள் (Back Glass Edges) ஆனது வளைந்திருப்பதை வெளிப்படையாக பார்க்க முடிகிறது. இதுவொரு வரவேற்கத்தக்க மாற்றமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஏனென்றால், கர்வ்டு கிளாஸ் (Curved Glass) டிசைன் ஆனது எப்போதுமே சிறந்த பிடிமானத்தையும், சிறந்த இன்-ஹேண்ட் உணர்வையும் (In-hand Feeling) வழங்கும். இதுமட்டுமின்றி இதன் க்ளிஃப் இன்டர்ஃபேஸில் (Glyph Interface) வடிவமைப்பிலும் சில மாற்றங்கள் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக , நத்திங் போன் 2 ஒரு புதிய தோற்றத்தை பெறவுள்ளது என்றே கூறலாம்.

நத்திங் போன் 2-வை ப்ரீ-ஆர்டர் செய்வது எப்படி? முன்னரே குறிப்பிட்டபடி, நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் முன்பதிவு பிளிப்கார்ட் வழியாக தொடங்கிவிட்டது. அறிமுகத்திற்கு முன்னரே நத்திங் போன் 2-வை வாங்க விரும்புபவர்கள் ரூ.2000 என்கிற திருப்பி செலுத்தப்படக்கூடிய தொகையை செலுத்தி இதை ப்ரீ-ஆர்டர் செய்துகொள்ளலாம்.

ஜூலை 11 அறிமுகத்திற்கு பின்னர், முன்னணி வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி நத்திங் போன் 2-வை வாங்கினால் உடனடி தள்ளுபடி கிடைக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ.1299 மதிப்புள்ள நத்திங் போன் 2 கேஸ் ரூ.499 என்கிற தள்ளுபடி விலைக்கும், ரூ.999 மதிப்புள்ள ஸ்கிரீன் ப்ரொடெக்டர் ரூ.399 என்கிற தள்ளுபடி விலைக்கும், ரூ.2499 மதிப்புள்ள 45W ஃபாஸ்ட் சார்ஜர் ரூ.1,499 என்கிற தள்ளுபடி விலைக்கும் வாங்க கிடைக்கும்.

நத்திங் போன் 2-வின் அம்சங்கள்: நத்திங் போன் 1 உடன் ஒப்பிடும் போது இது சற்றே பெரிய 6.7-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்பது ஏற்கனவே உறுதசெய்யப்பட்டுவிட்டது. மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் (Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC) மூலம் இயங்கும் என்பதும் அதிகாரப்பூர்வாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

நத்திங் போன் 1-ல் உள்ள ஸ்னாப்டிராகன் 778ஜி பிளஸ் (Snapdragon 778G+) உடன் ஒப்பிடும் போது இதுவொரு பெரிய மேம்பாடு ஆகும். ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் ஆனது சிறந்த யூஸர் எக்ஸ்பீரியன்ஸை (User experience) வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். மீதமுள்ள அம்சங்கள் ஜூலை 11 ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு தொடங்கும் வெளியீட்டு நிகழ்வில் அறிவிக்கப்படும். இந்நிகழ்வு நிறுவனத்தின் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

Best Mobiles in India

English summary
Nothing Phone 2 Design Revealed As Its Pre Order Started in India via Flipkart Check Price Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X