குட்பை சொன்ன Nothing நிறுவனம்.. இந்த மாடல் உங்ககிட்ட இருந்தா.. உஷாரய்யா உஷாரு!
டெக்னோ மற்றும் இன்ஃபினிக்ஸ் போன்ற பிராண்டுகள் பல ஆண்டுகளாக சிக்கி தவிக்கும் ஒரு பிரச்சினையை நத்திங் நிறுவனம் ஆனது "அசால்ட் ஆக ஹேண்டில் செய்கிறது" என்றே கூறலாம் . அது சாஃப்ட்வேர் அப்டேட் ஆகும். சாஃப்ட்வேர் அப்டேட் ஆனது நத்திங் ஸ்மார்ட்போன்களின் தூண்களில் ஒன்றாக இருந்து வருகிறது!
இந்த பிராண்ட் அதன் சாஃப்ட்வேர் அப்டேட் தொடர்பான விஷயங்களை தொடர்ந்து மேம்படுத்தியும் வருகிறது. இது சாஃப்ட்வேர் எக்ஸ்பீரியன்ஸை பற்றியது மட்டுமல்ல. இந்நிறுவனத்தின் சாஃப்ட்வேர் ரிலீஸும் சுவாரஸ்யமாக உள்ளது. உதாரணமாக ஆண்ட்ராய்டு 15 அப்டேட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இதன் ரிலீஸ் விரைவாக நடக்கவில்லை என்றாலும் கூட, பல பிராண்டுகளுக்கு முன்பே நத்திங் நிறுவனம் அதை முடித்துவிட்டது.

கூகுள் நிறுவனம் வருகிற 2025 ஜூன் மாதத்தில் ஆண்ட்ராய்டு 16 வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. அதற்குள் நத்திங் நிறுவனம் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அப்டேட்டை முடித்துவிட்டது. இருப்பினும் இதே போன்ற வேகத்தை ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டில் நாம் எதிர்பார்க்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் நத்திங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களில் ஒன்று ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டையே பெறாது.
அதென்ன என்ன மாடல்? அது நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மாட்போனான நத்திங் போன் 1 மாடலாகும். இது 2022 ஆம் ஆண்டில் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு 3 மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் கிடைக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டு இருந்தது. சொன்னபடியே இது அதன் கடைசி அப்டேட் ஆன ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐயும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெற்றது
இதன் மூலம் நத்திங் போன் 1 க்கான மேஜர் ஓஎஸ் அப்டேட் முடிவுக்கு வந்துள்ளது. நாட்டின் நிறுவனத்தின் புதுப்பிப்பு கொள்கையின்படி, ஆண்ட்ராய்டு 16 உட்பட எதிர்கால ஓஎஸ் அப்டேட்களுக்கு நத்திங் போன் 1) தகுதியற்றது. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன் இன்னும் சிறிது காலத்திற்கு செக்யூரிட்டி பேட்ச்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நத்திங் போன் 3 எப்போது அறிமுகமும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும் நத்திங் போன் 3 விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சரியான வெளியீட்டு தேதி பற்றிய விவரங்கள் இல்லை. டிசைன் மற்றும் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ஸ்மார்ட் பிரிக்ஸ்-ன் சமீபத்திய அறிக்கை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது "கணிசமாக" மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கேமரா செட்டப்பை கொண்டிருக்கும் என்று கூறுகிறது.
இது முந்தைய மாடல்களை விட குறிப்பிடத்தக்க மேம்படுத்தலை குறிக்கிறது. இந்த புதிய கேமரா செட்டப்பில் 3 கேமரா சென்சார்கள் இருக்கும். அவற்றில் ஒன்று லார்ஜ் பெரிஸ்கோப்-ஸ்டைல் டெலிஃபோட்டோ லென்ஸாக இருக்கலாம். நத்திங் போன் 3 மாடலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை . ஏனென்றால் நத்திங் போன் 3ஏ சீரீஸ் மற்றும் சிஎம்எப் போன் 2 ப்ரோ ஆகியவைகள் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பையே கொண்டுள்ளன.
ஆக நத்திங்கின் ஒரு ஃபிளாக்ஷிப் போன் ஆனது நிறுவனத்தின் பிரதான ஃபோன்களை விட சிறந்த கேமரா திறன்களை கொண்டுவருவது எதிர்பார்த்தது தான். நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் தான் உள்ளது. நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் பேட்டரி லைஃப்பை பொறுத்தவரை, நத்திங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh க்கும் அதிகமான பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பிடுகையில், நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் 4700mAh பேட்டரியைக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் நத்திங் போன் 3ஏ ப்ரோ மற்றும் சிஎம்எப் போன் 2 ப்ரோ ஆகிய இரண்டும் அதிகபட்சமாக 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளன. ஆக நத்திங் போன் 3 சற்றே பெரிய பேட்டரி உடன் வருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. விலையை பொறுத்தவரை ஆண்ட்ராய்டு என்கிற யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோவில், நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது "சுமார் 800 யூரோ" என்கிற விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கார்ல் பெய் உறுதிப்படுத்தி உள்ளார். அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.90,500 ஆகும்!


Click it and Unblock the Notifications








