இந்த போன் இருந்தா நீங்கதான் அதிர்ஷ்டசாலி.. சைலண்டா உள்ள வாங்க!

|

Nothing Phone (1) பயனர்களுக்கு தற்போது OS 1.1.6 அப்டேட் வெளியிடத் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த அப்டேட் மூலம் நத்திங் போன் பயனர்கள் பல அப்டேட்டைப் பெற இருக்கிறார்கள். இந்த அப்டேட் மூலம் இந்திய நத்திங் போன் பயனர்கள் ஒரு குறிப்பிடத்தக்க அம்சத்தை அனுபவிக்க இருக்கின்றனர்.

OS 1.1.6 அப்டேட்

OS 1.1.6 அப்டேட்

நத்திங் நிறுவனம் தங்களது நத்திங் போன் 1 பயனர்களுக்கு OS 1.1.6 அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம் ஜியோ 5ஜி, கூகுள் ஏஆர் போன்ற பல ஆதரவுகளை பயனர்கள் பெற இருக்கின்றனர்.

வாடிக்கையாளரின் தேவையை பூர்த்தி செய்யும் நத்திங் போன்

வாடிக்கையாளரின் தேவையை பூர்த்தி செய்யும் நத்திங் போன்

நத்திங் நிறுவனம் அறிமுகம் செய்த முதல் போன் நத்திங் போன் 1 ஆகும். ஐபோனுக்கு போட்டியாக இருக்கும் என களமிறக்கப்பட்ட இந்த போன், அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியதா என தெரியவில்லை. இருப்பினும் வித்தியாசமான தோற்றம் தனித்துவமான வடிவமைப்பு என வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இருந்தது.

அதிகளவு அக்கறை கொண்ட நத்திங்

அதிகளவு அக்கறை கொண்ட நத்திங்

அதைவிட நத்திங் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களின் மீது அதிகளவு அக்கறை உடன் செயல்பட்டு வருகிறது. நிறுவனத்தின் செயல்பாடு ஒவ்வொன்றும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும்படி இருக்கிறது. தங்களது வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு தொடர்ந்து புதுப்புது அம்சங்களோடு அப்டேட்டை வெளியிட்டு வருகிறது நத்திங் நிறுவனம்.

அதன்படி தற்போது பல்வேறு ஆதரவுகளுடன் ஓஎஸ் அப்டேட்டை நத்திங் நிறுவனம் தங்களது நத்திங் போன் 1 பயனர்களுக்கு வெளியிட்டு இருக்கிறது.

ஜியோ 5ஜி இணைய அணுகல்

ஜியோ 5ஜி இணைய அணுகல்

நத்திங் போன் 1 பயனர்கள் பெறும் ஆறாவது ஓஎஸ் அப்டேட் இதுவாகும். இந்த போன் சமீபத்தில் தான் அறிமுகமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நத்திங் போன் 1 இந்திய பயனர்களுக்கு OS 1.1.6. அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அப்டேட் ஆனது ஜியோ 5ஜி இணைய அணுகலை வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

தீவிரமாக செயல்படும் நிறுவனங்கள்

தீவிரமாக செயல்படும் நிறுவனங்கள்

இந்தியாவில் சமீபத்தில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. தொலைத் தொடர்பு நிறுவனங்களும் இதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 5ஜி சேவைக் கிடைக்கும் பகுதியில் இருந்தாலும் பலரால் 5ஜி சேவையை அணுக முடியவில்லை. காரணம் மொபைல் நிறுவனங்கள் அந்தந்த மொபைலுக்கு 5ஜி அணுகலுக்கான ஓஎஸ் அப்டேட்டை வெளியிட வேண்டும் எனவும் அது வெளியிட்ட பிறகே 5ஜி சேவை அணுக முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நத்திங் போன் 1 பயனர்கள் ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் பகுதியில் இருந்தால் தாராளமாக ஜியோ 5ஜியை அணுகலாம். ஆனால் சமீபத்தில் வெளியான OS 1.1.6க்கு உங்கள் போனை அப்டேட் செய்ய வேண்டும்.

1200 நிட்ஸ் பிரகாச டிஸ்ப்ளே

1200 நிட்ஸ் பிரகாச டிஸ்ப்ளே

நத்திங் போன் 1 அறிமுகத்தின் போது இதன் டிஸ்ப்ளே 1200 நிட்ஸ் பிரகாச நிலையைக் கொண்டிருக்கும் என விளம்பரப்படுத்தப்பட்டது ஆனால் 700 நிட்ஸ் மட்டுமே பிரகாச நிலைக் கொண்டிருந்தது. இந்த நிலையில் இந்த அப்டேட் மூலம் டிஸ்ப்ளே பிரைட்னஸ் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

துல்லியமான பேட்டரி மற்றும் கூர்மையான வீடியோக்கள்

துல்லியமான பேட்டரி மற்றும் கூர்மையான வீடியோக்கள்

இந்த அப்டேட் மூலம் பயனர்கள் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி அணுகலை பெறலாம். அதேபோல் கூகுள் ஏஆர் கோர் ஆதரவும் வழங்கப்பட்டிருக்கிறது. OS 1.1.5 OTA ஃபார்ம்வேர் அப்டேட் அளவு 62.04 எம்பி ஆகும். அதோடு இந்த அப்டேட் மூலம், கேமரா முன்பை விட கூர்மையான வீடியோக்களை பதிவு செய்யும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இந்த அப்டேட் இன் மூலம் துல்லியமான பேட்டரி நிலையை பயனர்கள் பெற முடியும்.

அப்டேட் செய்வது எப்படி?

அப்டேட் செய்வது எப்படி?

செட்டிங் பயன்பாட்டிற்கு சென்று சிஸ்டம் அப்டேட் என்பதை தேர்ந்தெடுத்து புதிய அப்டேட் இருக்கிறதா என்பதை செக் செய்து அப்டேட் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Nothing Phone (1) users Surprisely Gets OS Update With Jio 5G and More improvements

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X