ஆமா.. Nothing Phone 1-க்கு இப்போ இது ஒன்னு தான் குறைச்சல்.. அட போங்கப்பா!

|

ஓவர் பில்ட்-அப் பண்ணாம அப்படியே விட்டு இருந்தா கூட.. ஆசைப்பட்டு 4 பேரு.. ஆர்வக்கோளாறுல 10 பேருனு.. கொஞ்ச நஞ்சமாவது Nothing Phone 1 ஸ்மார்ட்போனின் விற்பனை நடந்து இருக்கும்!

அடுத்த ஐபோன் என்கிற அளவுக்கு

அடுத்த ஐபோன் என்கிற அளவுக்கு "தூக்கிவிட்டு" சோலிய முடிச்சு விட்டாங்க!

மிட்-ரேன்ஜ் விலையில் ரெடியான நத்திங் போன் 1-ஐ ஆப்பிள் ஐபோனிற்கு போட்டியாக களமிறங்கும் ஒரு ஸ்மார்ட்போன் என்றெல்லாம் பில்ட்-அப் செய்ததன் விளைவாக மக்கள் மத்தியில் Nothing Phone 1 மீதான எதிர்பார்ப்பு விண்ணை முட்டியது.

ஆனால் வெளியான வேகத்தில் Expectations வைத்த எல்லோருமே Depression-இல் மூழ்கினர்!

OnePlus பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் OnePlus பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் "இதை" ஒருத்தனும் கண்டுக்க மாட்டான்!

Nothing Phone 1 வெளியான வேகத்தில் வச்சி செஞ்சாங்க!

Nothing Phone 1 வெளியான வேகத்தில் வச்சி செஞ்சாங்க!

டெலிவரியில் செய்வதில் தாமதம், டிஸ்பிளேவில் டெட் பிக்ஸல் மற்றும் க்ரீன் டின்ட் தெரிகிறது, பேக் பேனலில் தூசி இருக்கிறது, ஆடியோ குவாலிட்டி மிகவும் மோசமாக இருக்கிறது, இதன் ஃபேஸ் அன்லாக் அம்சமானது மிகவும் நம்பகத்தன்மையற்றதாக இருக்கிறது என Nothing Phone 1 ஆனது - பலவகையான விமர்சனங்களுக்கு ஆளானது!

நடுவுல 'லைட்' எடிஷன் வருதுன்னு ஒரு கதை விட்டாங்க!

நடுவுல 'லைட்' எடிஷன் வருதுன்னு ஒரு கதை விட்டாங்க!

ஸ்டாண்டர்ட் எடிஷன் வெளியான வேகத்தில் 'லைட்' எடிஷன் அறிமுகமாகும் என்கிற ஒரு தகவலும் வந்தது. அதாவது 'நத்திங் போன் 1 லைட்' ஸ்மார்ட்போன் வெளியாகும் என்கிற தகவல் வெளியானது.

ஆனால் அந்த தகவல் "முழுக்க முழுக்க ஒரு வதந்தி' என்று கூறி மக்கள் வயிற்றில் பாலை ஊற்றினார் - நத்திங் நிறுவனத்தின் சிஇஓ ஆன கார்ல் பெய்!

VLC மீடியா பிளேயர் மீதான தடையும், இந்திய அரசின் கம்பி கட்டுற கதையும்!VLC மீடியா பிளேயர் மீதான தடையும், இந்திய அரசின் கம்பி கட்டுற கதையும்!

இதற்கிடையில்.. அவசரப்பட்டு Phone 1-ஐ வாங்கியவர்களுக்கு ஒரு பேட் நியூஸ்!

இதற்கிடையில்.. அவசரப்பட்டு Phone 1-ஐ வாங்கியவர்களுக்கு ஒரு பேட் நியூஸ்!

அது என்னவென்றால், நத்திங் போன் 1 ஆனது அவ்வளவு சீக்கிரத்தில் Android 13 ஓஎஸ் அப்டேட்டை பெறாது என்பதே ஆகும்.

இந்த தகவல் நத்திங் நிறுவனர் ஆன கார்ல் பெய்யிடமிருந்து நேரடியாக வந்துள்ளது. நத்திங் போன் 1-க்கு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட் எப்போது வரும்? என்று கேள்வி எழுப்பிய ஒரு ட்விட்டர் யூசருக்கு இப்போதைக்கு வராது என்கிற பதிலே கிடைத்துள்ளது!

Android 13 OS அப்டேட் ஆனது தோராயமாக எப்போது வரும்?

Android 13 OS அப்டேட் ஆனது தோராயமாக எப்போது வரும்?

"ஆமா.. இப்போ இந்த போனுக்கு ஓஎஸ் அப்டேட் தான் ஒரு குறைச்சல்!" என்று சிலர் கடுப்பானாலும் கூட, சிலர் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-க்காக காத்திருக்கவும் செய்கின்றனர்!

நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனிற்கான ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட் ஆனது 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் எப்போதாவது வரும் என்று நம்பப்படுகிறது, இது எதிர்பார்க்கப்படும் ஒரு டைம்லைன் ஆகும்; அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல!

திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; செம்ம டிமாண்டில் லேட்டஸ்ட் OnePlus போன்!திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; செம்ம டிமாண்டில் லேட்டஸ்ட் OnePlus போன்!

ஏன் இந்த தாமதம்?

ஏன் இந்த தாமதம்?

வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், நத்திங் நிறுவனத்திற்கு அதன் போன் 1-இன் வன்பொருளை மேம்படுத்தவே இன்னும் சில காலம் தேவைப்படுகிறது. அதன் பின்னரே மென்பொருள் மேம்படுத்தல்கள் நன்றாக வேலை செய்யும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, நத்திங் ஒரு புதிய பிராண்ட் ஆகும் மற்றும் போன் 1 ஆனது நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும் என்பதால், எல்லாமே கொஞ்சம் தாமதமாகவே நடக்கும்.

மூன்று வருட ஓஎஸ் அப்டேட்.. நான்கு வருட செக்யூரிட்டி அப்டேட்!

மூன்று வருட ஓஎஸ் அப்டேட்.. நான்கு வருட செக்யூரிட்டி அப்டேட்!

நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் (1) ஆனது நத்திங் ஓஎஸ் கொண்டு இயங்குகிறது, இது ஆண்ட்ராய்டை அடிப்படையாக கொண்ட ஒரு கஸ்டம் ஓஎஸ் ஆகும்.

நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போனிற்கு மூன்று வருடங்களுக்கான "பெரிய" OS அப்டேட்ஸ் மற்றும் நான்கு ஆண்டுகள் வரையிலான செக்யூரிட்டி அப்டேட்ஸ் கிடைக்கும்.

அறிமுகமானது முதல் இந்த ஸ்மார்ட்போன் 3 OTA அப்டேட்களை பெற்றுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இவ்ளோ கம்மி விலையில் இதை விட நல்ல TV வேணும்னா.. இனிமே தான் தயாரிக்கணும்!இவ்ளோ கம்மி விலையில் இதை விட நல்ல TV வேணும்னா.. இனிமே தான் தயாரிக்கணும்!

நத்திங் போன் 1-இன் நிறைகளும், குறைகளும்!

நத்திங் போன் 1-இன் நிறைகளும், குறைகளும்!

நிறைகளை பற்றி பேசினால்..

- பிரீமியம் ஆன பில்ட் குவாலிட்டி, வித்தியாசமான டிசைன்
- தெளிவான 120Hz OLED டிஸ்ப்ளே
- நல்ல வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் IP53 மதிப்பீடு
- போதுமான பேட்டரி ஆயுள்
- மெயின் கேமரா மிகவும் நன்றாக வேலை செய்கிறது

குறைகளை பற்றி பேசும் போது..

- மற்ற கேமராக்கள் சுமார் தான்; குறிப்பாக குறைந்த வெளிச்சத்தில் நல்ல புகைப்படங்களை எடுக்க போராடுகின்றன
- ஸ்மார்ட்போனுடன் சார்ஜர் வரவில்லை; தனியாக பணம் கொடுத்து வாங்க வேண்டும்!

Best Mobiles in India

English summary
Nothing Phone 1 Users Here is When Your Smartphone get Android 13 OS Update

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X