Phone (1) விலையை உயர்த்திய Nothing: நேரம் பார்த்து செஞ்சுட்டாங்க, எவ்வளவு அதிகம் தெரியுமா?
Nothing Phone (1) அறிமுகமான தினத்தில் இருந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சனங்களில் ஒருசில குறைபாடுகள் குறிப்பட்டாலும் விலைக்கேற்ற அம்சங்கள் இதில் இருக்கிறது என்பது ஊர்ஜிதமான உண்மை. இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விற்பனையாகி வருகிறது.

அமோக வரவேற்பில் நத்திங் போன் (1)
கட்டுப்பாடு தன்மையில் சில சிக்கல்களை சந்தித்து வருவதாக நத்திங் போன் (1) மீது புகார்கள் எழுந்தது. தொடர்ந்து இதை சரி செய்யும் வகையில் நத்திங் போன் (1) மூன்றுக்கும் மேற்பட்ட புதுப்பிப்புகளை வெளியிட்டது. ஸ்மார்ட்போனில் கோளாறு என்றதும் நத்திங் நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்தது. இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
வடிவமைப்பு, டிஸ்ப்ளே, கேமரா, பேட்டரி உள்ளிட்டவைகளில் எந்த குறைபாடும் இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Nothing Phone (1) விலை எவ்வளவு உயர்வு?
இந்த நிலையில் Nothing Phone (1) விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. Nothing Phone (1) விலை ஆனது ரூ.1000 என்ற வீதம் ஒவ்வொரு வேரியண்ட்-க்கும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.32,999 என இருந்த நிலையில் தற்போது ரூ.33,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.33,999 எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.39,999 எனவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வுக்கான காரணத்தையும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நத்திங் வெளியிட்ட அறிக்கை
"ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் நாணய மாற்று (currency exchange) விகிதங்கள், ஸ்மார்ட்போன் இயக்க பொருட்களின் விலை அதிகரிப்பு போன்ற பொருளாதார காரணங்களால் இந்த முடிவை நிறுவனம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு பெரும்பாலான நிறுவனங்கள் எடுக்கும் முடிவு தான் இது. தற்போதைய சூழ்நிலைக்கு பதிலளிக்கும் விதமாக, ஸ்மார்ட்போன் விலையில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது" என நத்திங் அறிக்கை வெளியிட்டுள்ளது.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த ஸ்மார்ட்போன்
ஐபோனுக்கு இணை போட்டியாக இருக்கும் என நத்திங் போன் (1) அறிமுகம் செய்யப்பட்டது. அந்தளவிற்கு போட்டியை ஏற்படுத்தியதா என்றால் அது கேள்விக்குறி தான்.
இருப்பினும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கிறது என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை.
டூயல் ரியர் கேமரா, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் என பல மேம்பட்ட அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது.

கெபாசிட்டிவ் இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
6.5 இன்ச் முழு எச்டி+ ஓஎல்இடி டிஸ்ப்ளே உடன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், HDR10+, 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.
அதேபோல் பாதுகாப்பு அம்சத்துக்கு என கெபாசிட்டிவ் இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது.

Qualcomm Snapdragon 778G+ SoC ஆதரவு
மிகவும் சக்தி வாய்ந்த Qualcomm Snapdragon 778G+ SoC மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. நத்திங் ஃபோன் 1 ஆனது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையாகக் கொண்ட நத்திங் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் மூன்று வருட ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு புதிப்புப்புகளை பெறும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சோனி IMX766 சென்சார்கள்
டூயல் கேமராக்கள் என்றாலும் தரமான கேமரா சென்சார்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. Nothing Phone (1) இல் சோனி IMX766 சென்சார் இடம்பெற்றிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி சோனி IMX766 கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைட் சென்சார் என டூயல் கேமரா வசதி இருக்கிறது.
அதேபோல் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி ஆதரவுக்கு என 16 எம்பி சோனி IMX471 சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு
Nothing Phone (1) இல் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இதை சார்ஜ் செய்வதற்கு 33W USB PD ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் ஆதரவு உள்ளது. அதேபோல் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5 வாட்ஸ் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications