டக்குனு ஸ்டாக் இருக்கும் போதே Nothing Phone (1) வாங்கிடுங்க.! இல்லனா ரேட் இன்னும் ஜாஸ்தியாகிடும்!

|

உலகளவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெற்றிகரமாக தனது முதல் விற்பனையில் அனைத்து யூனிட்களையும் விற்றுத் தீர்த்த Nothing நிறுவனம், இப்போது மீண்டும் அதன் Nothing Phone (1) மாடலின் ஸ்டாக்கை Flipkart இல் கிடைக்கும்படி செய்துள்ளது. இந்த முறை ஸ்டாக் செய்யப்பட்டுள்ள Nothing Phone (1) மாடல்கள் புதிய விலையுடன் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. எப்படி இந்த ஸ்மார்ட்போனை சலுகையுடன் குறைந்த விலையில் வாங்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

Nothing Phone (1) சிறப்பம்சங்கள்

Nothing Phone (1) சிறப்பம்சங்கள்

நத்திங் ஃபோன் (1) டிவைஸில் 6.55' இன்ச் FHD+ கொண்ட 10 பிட் OLED டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இது HDR10+ ஐ ஆதரிக்கிறது. இந்த டிஸ்பிளே 120Hz டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்லிங் ரேட் உடன் வருகிறது. இந்த போனின் பேனல் 1200 நிட்களின் அதிகபட்ச பிரைட்னஸை கொண்டிருந்தாலும், இதன் சாப்ட்வெர் இப்போது 700 நிட்ஸ் வரை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கிறது.

Nothing Phone (1) ஸ்டோரேஜ் மற்றும் கேமரா விபரம்

Nothing Phone (1) ஸ்டோரேஜ் மற்றும் கேமரா விபரம்

Nothing Phone (1) ஸ்மார்ட்போன் 128ஜிபி மற்றும் 256ஜிபி யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி அல்லது 12ஜிபி LPDDR5 ரேம் உடன் வருகிறது. கேமரா அம்சங்களைப் பற்றிப் பார்க்கையில், இந்த போனின் பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன, இதில் 50MP சோனி IMX766 கொண்ட பிரைமரி கேமரா மற்றும் 50MP Samsung JN1 அல்ட்ராவைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் இது 16MP சென்சாரை கொண்டுள்ளது.

Nothing Phone (1) உடன் சார்ஜ்ர் வராதா?

Nothing Phone (1) உடன் சார்ஜ்ர் வராதா?

பேட்டரி மற்றும் சார்ஜிங் பற்றிப் பேசுகையில், இது 4500mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது Quick Charge 4 அல்லது USB பவர் டெலிவரி 3ஐப் பயன்படுத்தி நிலையான சார்ஜரை விட 33W வேகமாக போனை சார்ஜ் செய்கிறது. இருப்பினும், ஸ்மார்ட்போன் உடன் அதன் பாக்சில் சார்ஜர் கொடுக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இது போக, இந்த டிவைஸ் டிரிபிள் மைக்ரோஃபோன்ஸ், புளூடூத் 5.2, வைஃபை 6 மற்றும் 12 5ஜி பேண்டுகள் ஆகியவற்றை ஆதரிக்கிறது.

Nothing Phone (1) டிவைஸின் விலை அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா?

Nothing Phone (1) டிவைஸின் விலை அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா?

Nothing Phone (1) டிவைஸை அறிமுகத்தின் போது அல்லது இந்த டிவைஸின் முதல் விற்பனையின் போது வாங்கியிருந்தால் உங்களுக்கு நிச்சயமாகக் குறைந்த விலையில் இந்த சாதனம் கிடைத்திருக்கும். இப்போதைய புதிய விலையின் படி Nothing Phone (1) டிவைஸின் விலை சற்று திடீரென அதிகரித்துள்ளது. ஜூலை 12 அன்று அறிமுகப்படுத்தப்பட்டதை விட இப்போது Nothing Phone (1) டிவைஸின் விலை ரூ. 1,000 அதிகமாகியுள்ளது என்பதே உண்மை. கவலைப்படாதீர்கள் சலுகை இன்னும் இருக்கு.

Nothing Phone (1) சாதனத்தின் புதிய விலை என்ன?

Nothing Phone (1) சாதனத்தின் புதிய விலை என்ன?

Nothing Phone (1) டிவைஸின் 8ஜிபி/128ஜிபி வேரியண்ட்டின் திருத்தப்பட்ட விலை ரூ.33,999 ஆகும். அதேபோல், 8ஜிபி/256ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.36,999 ஆகும். இறுதியாக Nothing Phone (1) சாதனத்தின் 12ஜிபி/256ஜிபி வேரியண்ட் விலை ரூ.39,999 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இப்போது HDFC வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயனர்களுக்கு EMI உடன் ரூ. 1,500 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது.

விலை அதிகரித்தும் பழைய விலையில் வாங்க சலுகை இருக்கே!

விலை அதிகரித்தும் பழைய விலையில் வாங்க சலுகை இருக்கே!

ஒருவேளை, EMI விருப்பம் மூலம் Nothing Phone (1) சாதனத்தை உங்களுக்கு வாங்க விருப்பம் இல்லை என்றால், HDFC வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி Nothing Phone (1) வாங்கும் போது ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. கூடுதலாக, எக்ஸ்சேஞ் சலுகையாக பயனர்கள் தங்களின் பழைய போன்களை மாற்றும் போது ரூ.17,0100 வரை தள்ளுபடி கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.1000 விலை அதிகரிக்கப்பட்டாலும், இந்த சலுகைகளுடன் Nothing Phone (1) ஐ பழைய விலையிலேயே நீங்கள் வாங்கலாம்.

எந்த Nothing Phone (1) வேரியண்ட் எந்த நிறத்தில் கிடைக்கிறது?

எந்த Nothing Phone (1) வேரியண்ட் எந்த நிறத்தில் கிடைக்கிறது?

Nothing Phone (1) இப்போது வைட் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இருப்பினும், அனைத்து வேரியண்ட் மாடல்களும் இரண்டு வண்ணங்களில் கிடைக்கவில்லை. நத்திங் ஃபோன் (1) வைட் மாடல் 8ஜிபி/256ஜிபி வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. அதேசமயம் பிளாக் Nothing Phone (1) மாடல் 3 ஸ்டோரேஜ் வேரியண்டில் 8ஜிபி/128ஜிபி, 8ஜிபி/256ஜிபி, மற்றும் 12ஜிபி/256ஜிபி கிடைக்கிறது. வைட் Nothing Phone (1) 12ஜிபி/256ஜிபி மாடல் இப்போதைக்கு ஸ்டாக்கில் இல்லை.

Best Mobiles in India

English summary
Nothing Phone (1) Is Back In Stock On Flipkart With New Price And Offer

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X