வண்டிக்கட்டி வருவீங்களே: ரூ.6,500 தள்ளுபடி விலையில் Nothing Phone (1)- மிஸ் பண்ணாதீங்க!

|

ஐபோனுக்கு போட்டி., இதுவரை பயன்படுத்தியது ஸ்மார்ட்போனே இல்லை போன்ற பல்வேறு விளம்பரங்களுக்கு மத்தியில் நத்திங் போன் (1) அறிமுகமானது. குறிப்பிட்ட அளவு பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருந்தது இந்த ஸ்மார்ட்போன். மிட் ரேன்ஜ் விலை ஸ்மார்ட்போன்களுக்கு கடுமையான சவாலாக இருக்கிறது Nothing Phone (1).

பிளிப்கார்ட் இல் பிரத்யேக சலுகை

பிளிப்கார்ட் இல் பிரத்யேக சலுகை

நத்திங் போன் (1) இன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நத்திங் போன் 1 ஆரம்பத்தில் பிளிப்கார்ட் இல் தான் பிரத்யேகமாக விற்பனைக்கு வந்தது. இதை தொடர்ந்து இந்நாள் வரை நத்திங் போன் 1க்கு பிளிப்கார்ட் தளத்தில் தான் அதீத சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது நத்திங் போன் 1க்கு பிளிப்கார்ட் தளத்தில் ரூ.6500 வரை தள்ளுபடி வழங்கப்பட்டிருக்கிறது.

ரூ.6500 வரை தள்ளுபடி

ரூ.6500 வரை தள்ளுபடி

நத்திங் போன் (1) ஆனது ரூ.32,999 என அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமான குறுகிய நாட்களில் இந்த போனுக்கான டிமாண்ட் அதிகரித்தது. தொடர்ந்து இந்த போனின் விலையும் ரூ.1000 உயர்த்தப்பட்டது. நத்திங் போன் 1ஐ வாங்கலாம் என்று யோசித்து இந்த விலை உயர்வு அறிவிப்பு ஒரு தடையாக இருந்திருந்தால் இனி இந்த தடை உங்களுக்கு இல்லை. காரணம் பிளிப்கார்ட்டில் நத்திங் போன் (1)க்கு ரூ.6500 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரூ.27,499 மட்டுமே

ரூ.27,499 மட்டுமே

ரூ.32,999 என்ற விலையில் அறிமுகமான நத்திங் போன் (1) பிளிப்கார்ட்டில் வழங்கப்பட்ட ரூ.6500 தள்ளுபடியின் மூலம் ரூ.27,499 என கிடைக்கிறது. கூடுதல் தள்ளுபடியும் உண்டு, PNB கிரெடிட் கார்டு அல்லது ஃபெடரல் வங்கி கார்டை பயன்படுத்தி பணம் செலுத்தினால் 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். ஸ்மார்ட்போனின் நிலையை பொறுத்து எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு

வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு

Nothing Phone (1) அறிமுகமான தினத்தில் இருந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சனங்களில் ஒருசில குறைபாடுகள் குறிப்பிட்டாலும் விலைக்கேற்ற அம்சங்கள் இதில் இருக்கிறது என்பது ஊர்ஜிதமான உண்மை. இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விற்பனையாகி வருகிறது.

டிஸ்ப்ளே, கேமரா, பேட்டரி

டிஸ்ப்ளே, கேமரா, பேட்டரி

கட்டுப்பாடு தன்மையில் சில சிக்கல்களை சந்தித்து வருவதாக நத்திங் போன் (1) மீது புகார்கள் எழுந்தது. தொடர்ந்து இதை சரி செய்யும் வகையில் நத்திங் போன் (1) மூன்றுக்கும் மேற்பட்ட புதுப்பிப்புகளை வெளியிட்டது. ஸ்மார்ட்போனில் கோளாறு என்றதும் நத்திங் நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்தது. இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. வடிவமைப்பு, டிஸ்ப்ளே, கேமரா, பேட்டரி உள்ளிட்டவைகளில் எந்த குறைபாடும் இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Nothing Phone (1) விலை

Nothing Phone (1) விலை

Nothing Phone (1) ஆனது மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த அனைத்தின் விலையும் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. Nothing Phone (1) விலை ஆனது ரூ.1000 என்ற வீதம் ஒவ்வொரு வேரியண்ட்-க்கும் உயர்த்தப்பட்டது. அதன்படி 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.32,999 என இருந்த நிலையில் தற்போது ரூ.33,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.33,999 எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.39,999 எனவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சக்தி வாய்ந்த சிப்செட்

சக்தி வாய்ந்த சிப்செட்

6.5 இன்ச் முழு எச்டி+ ஓஎல்இடி டிஸ்ப்ளே உடன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், HDR10+, 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் பாதுகாப்பு அம்சத்துக்கு என கெபாசிட்டிவ் இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது.

மிகவும் சக்தி வாய்ந்த Qualcomm Snapdragon 778G+ SoC மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

டூயல் 50 எம்பி கேமரா

டூயல் 50 எம்பி கேமரா

டூயல் கேமராக்கள் என்றாலும் தரமான கேமரா சென்சார்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. Nothing Phone (1) இல் சோனி IMX766 சென்சார் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி சோனி IMX766 கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைட் சென்சார் என டூயல் கேமரா வசதி இருக்கிறது. அதேபோல் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி ஆதரவுக்கு என 16 எம்பி சோனி IMX471 சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

Nothing Phone (1) இல் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இதை சார்ஜ் செய்வதற்கு 33W USB PD ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் ஆதரவு உள்ளது. அதேபோல் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5 வாட்ஸ் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Nothing Phone (1) Available at Huge Discount Price in Flipkart: Is it Worth to Buy?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X