புது போன் வாங்க போனவங்க எல்லாம் அப்டியே திரும்பி வாங்க.. Nothing Phone 2 இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!
இந்த 2023 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போனாக உருமாறியுள்ள நத்திங் நிறுவனத்தின் இரண்டாவது ஸ்மார்ட்போன், அதாவது நத்திங் போன் 2 (Nothing Phone 2) எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்கிற வெளியீட்டு தேதி (Launch Date in India) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நத்திங் போன் 2 ஆனது வருகிற ஜூலை 11 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று நத்திங் நிறுவனம் அறிவித்தது. நத்திங் போன் 2-வின் வெளியீட்டு நிகழ்வானது நத்திங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (Nothing Website) மற்றும் நிறுவனத்தின் யூட்யூப் சேனல் (Nothing YouTube Channel) வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.

ஜூலை 11 வெளியீட்டு தேதியோடு சேர்த்து, நத்திங் நிறுவனமானது, நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனின் பின்பக்க டிசைனை, தனது ட்விட்டர் (Twitter) பக்கம் வழியாக 'டீஸ்' செய்துள்ளது. அதன் மூலம் நத்திங் போன் 2-வின் பின்புற பேனலில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கிளிஃப் இன்டர்ஃபேஸை (redesigned Glyph interface) பார்க்க முடிகிறது.
நத்திங் போன் 2-வின் ரீடிஸைன்டு கிளிஃப் இன்டர்ஃபேஸ் ஆனது - டிப்ஸ்டர் ஸ்டீவ் ஹெம்மர்ஸ்டோஃபர் வழியாக வெளிப்படுத்தப்பட்ட ரெண்டர்களை போலவே - கேமரா செட்டப் உட்பட ஸ்மார்ட்போனின் பேக் பேனலை சுற்றியுள்ள எல்இடி ஸ்ட்ரிப்ஸ்களின் (LED Strips) மறுவடிவமைப்பு செய்யப்பட்ட தளவமைப்பை காட்டுகிறது.
இதுதவிர்த்து நத்திங் நிறுவனத்தின் இந்த இரண்டாவது ஸ்மார்ட்போனானது குவால்காமின் (Qualcomm) ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் சிப்செட் உடன் வரும் என்பதும், இந்த போன் 6.7 இன்ச் அளவிலான டிப்ஸ்லே டிஸ்பிளே மற்றும் சற்றே பெரிய 4,700எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கும் என்பதும் நத்திங் நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஓஎஸ்-ஐ பொறுத்தவரை, நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் ஆனது உற்பத்தித்திறன் மற்றும் மினிமலிசத்தை மையமாக கொண்ட நத்திங் ஓஎஸ் 2.0 ஆப்ரேட்டிங் சிஸ்டம் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது மூன்று வருட ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களையும், நான்கு வருட செக்யூரிட்டி அப்டேட்களையும் பெறும் என்பதை நத்திங் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், நத்திங் போன் 2 அதன் முன்னோடியை போலவே, அதாவது நத்திங் போன் 1-ஐ போலவே இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று நத்திங் நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்தது. நத்திங் போன் 2 தயாரிப்பின் போது மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக்-இல்லாத பேக்கேஜிங் ஆகியவைகள் பயன்படுத்தப்படும் என்பதையும் நத்திங் வெளிப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications