Home
Mobile

Carl Pei கலக்கல்.. ஆப்பிள், சாம்சங் ஸ்டைலில் 4 புதிய Nothing போன்கள்.. அடிச்சு புடிச்சு வாங்க போறாங்க!

2025 ஆம் ஆண்டில் வெளியாகும் நத்திங் ஸ்மார்ட்போன்களுக்காக காத்திருப்பவர்களுக்கு 1 பேட் நியூஸ், கூடவே 4 குட் நியூஸ். பேட் நியூஸ் என்னவென்றால்.. 2025 மார்ச் 4 ஆம் தேதி நடக்கும் நத்திங் நிறுவனத்தின் வெளியீட்டு நிகழ்வில் நத்திங் போன் 3 அறிமுகம் ஆகாது என்பது போல் தெரிகிறது.

குட் நியூஸ் என்னவென்றால் நத்திங் போன் 3 அறிமுகம் ஆவதற்கு முன்பாக, வேறு 3 புதிய நத்திங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆக அந்த 3 புதிய நத்திங் போன்களும், அதை தொடர்ந்து வரும் நத்திங் போன் 3 என மொத்தம் 4 மாடல்களுமே - நத்திங் ரசிகர்களுக்கான 4 குட் நியூஸ் ஆகும்!

Carl Pei கலக்கல்.. ஆப்பிள், சாம்சங் ஸ்டைலில் 4 புதிய Nothing போன்கள்!

ஆக மார்ச் 4 ஆம் தேதி நடக்கும் நத்திங் நிறுவனத்தின் வெளியீட்டு நிகழ்வில் எந்த மாடல் அறிமுகமாகும்?நத்திங் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன.. நத்திங் போன் 2 மாடலின் அப்கிரேடெட் வெர்ஷன் ஆன நத்திங் போன் 3 ஆனது இன்னும் வளர்ச்சியில் தான் உள்ளதாம். ஆக மார்ச் 4 ஆம் தேதி நத்திங் போன் 3ஏ அறிமுகம் செய்யப்படலாம் என்று ஊகிக்கப்படுகிறது

நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான யோகேஷ் ப்ராரின் (@heyitsyogesh) கூற்றுப்படி, நத்திங் போன் 3 க்கு முன்னதாக மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய நத்திங் திட்டமிட்டுள்ளது. இதில் மார்ச் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள மாடலும் அடங்கும். ஆக நத்திங்கின் ஃபிளாக்ஷிப் வெளியீட்டிற்காக காத்திருந்த மக்கள் - கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.

தற்போது வரையிலாக நத்திங் நிறுவனம் அதன் எந்த மாடல்களின் பெயரையுமே வெளிப்படுத்தவில்லை; உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் இதுவரை வெளியான லீக்ஸ்களை வைத்து பார்க்கும் போது 2025 ஆம் ஆண்டில் நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a), நத்திங் போன் 3 (Nothing Phone 3), நத்திங் போன் 3 ப்ரோ (Nothing Phone 3 Pro) மாடல்களுடன் சேர்த்து ஒரு போக்கிமான் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம்

மார்ச் 4 வெளியீட்டு நிகழ்வானது 2025 மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC 2025) நிகழ்வுடன் ஒத்துப்போகிறது. இதுகுறித்து எக்ஸ் தளம் வழியாக நத்திங் வெளியிட்டுள்ள டீஸர் வீடியோ வழியாக வரவிருக்கும் ஸ்மாட்போனின் ரியர் கேமராவின் ஒரு வியூ-வை மட்டுமே பார்க்க முடிகிறது. கூடவே நத்திங் பிராண்டின் சிக்னேச்சர் டிசைன் ஆன கிளிஃப் இன்டர்பேஸையும் காண முடிகிறது

நத்திங் போன் 3, நத்திங் போன் 3ஏ மற்றும் நத்திங் போன் 3 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் ஆப்பிள் ஐபோனில் இருந்து ஈர்க்கப்பட்ட ஆக்ஷன் பட்டன் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்கீழ் பயனர்கள் ஷார்ட்கட்களை கஸ்டமைஸ் செய்ய முடியும், செட்டிங்ஸ்-ஐ மாற்ற அல்லது ஆப்களை லான்ச் செய்ய முடியும்

அடுத்துவரும் நத்திங் போனில் ஆக்ஷன் பட்டன் இடம்பெறும் பட்சத்தில் யூசர் சென்ட்ரிக் டிசைன் மற்றும் புதுமையான செயல்பாட்டிற்காக நத்திங் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நிச்சயம் நற்பெயர் கிடைக்கும். இதுதவிர்த்து நத்திங் போன் 3 மாடலில் 6.5-இன்ச் டிஸ்பிளேவைஇடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே ஸ்மார்ட்போனின் ப்ரோ வேரியண்ட் ஆனது, அதாவது நத்திங் போன் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் டிஸ்பிளேவை பேக் செய்யலாம்.இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3) அல்லது மீடியாடெக் டைமன்சிட்டி 9200 பிளஸ் (MediaTek Dimensity 9200 Plus) சிப்செட்டில் இயங்கலாம். இந்த சிப்செட்கள் சாத்தியமான மலிவுத்தன்மையையும், வலுவான மிட்ரேன்ஜ் ஃபோகஸையும் குறிக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing may launch 3 New Smartphone Before Nothing Phone 3 Start From Nothing Phone 3a March 4
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X